பாலசுதீன மக்களும் - இசுரேலின் அரச பயங்கரவாதமும் - கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

பாலசுதீன மக்களும் - இசுரேலின் அரச பயங்கரவாதமும் - கருத்தரங்கம்

சென்னை, நவ.2- உலக நாடுகளால் கைவிடப்பட்ட பாலசுதீன மக்களும் இசுரேலின் அரச பயங்கரவாதமும் என்ற கருத்தரங்கு 21.10.2023 சனிக்கிழமை மாலை 6:00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கருத்தரங்கில் எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் மு.இரா.மாணிக்கம் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம் தலைமையேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றியுரை ஆற்றினார். செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமது தலைமை உரையில் பாலசுதீனத்தில் நடைபெறும் கொடுமைகள் பற்றி எடுத்துரைத்தார். கருத்துரை வழங்கினார் எழுத்தாளர் விஜயபாஸ்கர்.

No comments:

Post a Comment