சென்னையில் நகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகை களில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும் வட சென்னை பகுதிக ளான காசிமேடு, ராயபு ரம், வண்ணை நகர், பெரம்பூர், திருவொற்றி யூர், புதுவண்ணை நகர், தண்டையார் பேட்டை உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடத்தக்க வளர்ச் சியை பெறவில்லை.
வடசென்னை பகு தியை பொறுத்தவரை சாலை வசதி பெரும் சிக் கலாக உள்ளது. குறுகிய சாலையில் பயணம் செய் வது சவாலானது. இத னால் போக்குவரத்தில் மற்ற பகுதிகளுடன் ஒப் பிடும்போது வட சென்னை பகுதி மிகவும் பின்தங்கிய நிலையி லேயே உள்ளது.
இங்கு போதிய அடிப் படை வசதிகளும், உள் கட்டமைப்புகளும் இல் லாத நிலை காணப்படு கிறது.
வடசென்னை மக்க ளின் நீண்ட கால கனவை நிஜமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முடி வெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வட சென்னை பகுதி மேம் பாட்டிற்காக ‘வட சென்னை வளர்ச்சி திட் டம்’ என்ற புதிய திட் டத்தை அரசு உருவாக்கி உள்ளது.
இந்த திட்டத்திற்காக ரூ.1000 கோடியை ஒதுக்கி 3 ஆண்டுகளில் செலவிடப் படும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடை பெற்று வருகின்றன. குறிப் பாக, பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 பேருந்து நிலையங்களை மேம் படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வடசென்னையில் உள்ள காசிமேடு, திருவொற்றி யூர், எண்ணூர் உள் ளிட்ட கடற்கரை ஓரங் களில் திடக்கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந் துள்ளது. இந்நிலையில் இந்த கடற்கரை ஓரங் களை சீரமைத்து, நடை பாதை அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள் ளது.
இந்த நடைபாதை வடசென்னை கடற்க ரையை ஒட்டி 5 கி.மீ. தொலைவிற்கு அமைக் கப்பட உள்ளது. மேலும் கடல் உணவுகள், குழந் தைகள் விளையாடும் பகு திகள், சிற்ப தோட்டங் கள், நகர்ப்புற உடற் பயிற்சி கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட பல் வேறு சிறப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த நடைபாதை அமைக்கும் பணி இன் னும் இரண்டு வாரங் களில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது:
காசிமேடு கடற்கரை யோரம் இம்மாத இறு திக்குள் (2 வாரங்களில்) புதிதாக நடைபாதை அமைக்கும் பணிகள் தொடங்கும். இப்பணி கள் நிறைவடைந்தால், காசிமேட்டில் இருந்து திருவொற்றியூருக்கு பொதுமக்கள் நடந்து செல்ல முடியும். போக்கு வரத்து நெரிசல் மற்றும் குடியிருப்பு மக்கள் தொகை அடிப்படையில் இந்த திட் டம் வடிவமைக் கப்பட்டுள் ளது. இது சுற்றுலா பயணி களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள் ளது.
திட்டப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் கண்ட றியப்பட்டுள்ளன. சில இடங்களில் உள்ள கட்டுமானங்களை வரு வாய்த்துறையினர் விரை வில் அகற்றுவார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றப் பட்ட பிறகு பணி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment