குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்து தெருமுனைக் கூட்டங்கள் அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்


அரியலூர், நவ.18 - 16.11.2023 அன்று மாலை 5:30 மணிக்கு அரியலூர், புற வழிச்சாலை, கோபால் அலுவலகத்தில் நடைபெற்ற அரியலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

க.சிந்தனைச்செல்வன் தலைமையில், சு.மணிவண்ணன் (காப்பாளர்), விடு தலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்டச் செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), இரத்தின.இராமச் சந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்), மா.சங்கர் (மாவட்ட துணை செயலா ளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழ கம்) சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா - விடுதலை சந்தா சேர்ப்புப் பற்றி கலந்துரையாடப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்றோர்: நீ.பெரியார் செல்வன்,  கே.அண்ணா மலை, எல்.தமிழரசன், பி.வெங்கடா சலம், சி.தமிழ்சேகரன், மரவனூர் ப.மதியழகன், மு.மருதமுத்து, பெ.கோ. கோபால், சி.சிவக்கொழுந்து, மு.முத்தமிழ்ச்செல்வன், சு.அறிவன், பு.மணிவண்ணன், கோ.க.சேகர், தா.மதி யழகன், வெ.இளவரசன், வ.லகாந்தி, சு.வினோத், த.பன்னீர்செல்வம், செ.விமல்ராஜ், இரா.செல்வகுமார், இரா.தமிழரசன், சி.கருப்புசாமி, சவு.செந்தில் குமார், த.சுப்புராயன், ந.செல்லமுத்து, வி.மணிகண்டன், த.செந்தில் மற்றும் கழகத் தோழர்கள்.

தோழர் சங்கரய்யா - க.பார்வதி மறைவுக்கு இரங்கல்

முதுபெரும் பெரியார் பெருந்தொண் டர் க.பார்வதி அம்மையார் மறைவுக் கும், முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவரும், மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா மறைவுக்கும் அவர் களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை யும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானங்கள்

எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி 91ஆவது ஆண்டு பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளை தெரிவிப்ப தோடு மானுட சமூகத்தின் மீட்சிக்காக, மனித நேயத்தைக் காக்க, பாசிச சக்தி களை வீட்டுக்கு அனுப்ப அயராது பாடு படும் அய்யாவிற்கு இக்கூட்டம் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அறிவார்ந்த “கருத்தரங்கம்“ ஒன்றினை அரியலூர் மாவட்டத்தில் நடத்திட தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர்களின் மான மீட்பு கேடய மாம் ‘விடுதலை’ நாளேட்டிற்கு கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமான சந் தாக்களை திரட்டி அளிப்பதென முடிவு செய்யப்படுகிறது.

ஜாதி ஒழிப்பு மாவீரர்களை நினை வுபடுத்தும் வகையிலும், “விஸ்வகர்மா யோஜனா” என்ற பெயரில் குலத் தொழிலை நடைமுறைப்படுத்தி - குலக் கல்வியைத் திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டத்தை எதிர்த்தும் தெரு முனைக் கூட்டங்களை நடத்திடவும் தீர்மானிக்கப்படுகிறது.

திராவிட இயக்கத்தின் முன்னோடி கள் - நமது மண்ணின் மைந்தர்கள் மாவீரன் உடையார்பாளையம் வேலா யுதம், தமிழ் மறவர் பொன்னம்பலனார் ஆகியோரின் பிறந்த நாள் விழாக்களை அரியலூர் மாவட்டத்தில் கொண் டாடும் வகையில் தமிழர் தலைவர் அவர்கள் அனுமதியளித்து ஒரு தேதி யினை வழங்கிடுமாறு இந்தக் கலந்துரை யாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட இணைச் செயலாளர்: இரத்தின.இராமச்சந்திரன்

மாவட்ட விவசாய அணித் தலைவர்: மா.சங்கர்

மாவட்ட விவசாய அணி செயலா ளர்: ஆ.இளவழகன்

மாவட்ட விவசாய அணி அமைப் பாளர்: பெ.கோபால்

No comments:

Post a Comment