காவிரி நதிநீர் பிரச்சினை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருநாடக அரசு மதிக்க வேண்டாமா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

காவிரி நதிநீர் பிரச்சினை: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கருநாடக அரசு மதிக்க வேண்டாமா? அமைச்சர் துரைமுருகன் கண்டனம்!

வேலூர், நவ. 1- கருநாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல கருநாடகா நினைக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் சாடினார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேற்று (31.10.2023) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்கு பணிவார்கள். ஆளுநரின் போக்கு முற்றிலும் சரியில்லை. ஆனால் இந்த விளையாட்டை ஒன்றிய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்ப்பது சரியல்ல'' என்றார்.

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கருநாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். அதுவும் அல்ல.. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அது விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். ஆனால், ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல" என்றார்.

No comments:

Post a Comment