தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய உத்தரவுப்படி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணைய உத்தரவுப்படி காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை சட்ட அமைச்சர் ரகுபதி பேட்டி

திருச்சி, நவ. 5 - தூத்துக்குடி யில் 2018இல் போராட்டத்தில் ஈடுபட் டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிபிசிஅய்டி விசாரித்து வந்த நிலை யில்,  பின்னர் சிபிஅய் விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 

இதையடுத்து, இந்த வழக்கை சிபிஅய் அதி காரிகள் விசாரித்து வரு கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசா ரணை ஆணையம்  விசா ரணை மேற்கொண்டது. இதன்பின் இந்த ஆணை யம், தனது விசாரணை அறிக்கையை முதலமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இதில் சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்து ரையும் செய்யப்பட்டது. 

இந்தநிலையில், சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணை யம் 17 அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நட வடிக்கையும் எடுக்க வில்லை என மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (4.11.2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை அடிப் படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப் பினர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 17க்கு ஒத்தி வைக் கப்பட்டது. 

இந்த நிலையில், இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ரகுபதி, தூத் துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது; அருணா ஜெகதீசன் அறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக நீதிமன்றத் தில் அரசு தெரிவித்துள்ளது என தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment