பந்தனம்திட்டா, நவ.24 சபரி மலை அய்யப்பன் கோயில் செல்லும் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் பாம்புபிடி தொழிலாளர்களை பணிய மர்த்துவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் சுவாமி தரி சனம் மேற்கொள்ள சென்ற 6 வயது சிறுமியை 22.11.2023 அன்று பாம்பு கடித்ததை யடுத்து கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. சபரிமலைப்பகுதியில் அதிக ளவிலான பாம்புபிடி தொழி
லாளர்களை பணியமர்த்த அரசு முடிவெடுத்துள்ளது. தேவஸ்வம் மற்றும் வனத்துறை அமைச்சர்களின் கலந்தாய்வுக் கூட்டத்துக்குப்பிறகு இம்முடி வெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 4 பாம்புபிடி தொழிலாளர்கள் வழித் தடத்தில் உள்ளனர். மேலும் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறந்த வனத்துறை அதிகாரி களும் இப்பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் கொள்கிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
பாம்புக்கடியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிரஞ்சனாவின் (6) உடல்நிலை தற்போது சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment