தொல்லியல் துறையை கீழடியிலிருந்து வெளியேற்றியது ஏன்? ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

தொல்லியல் துறையை கீழடியிலிருந்து வெளியேற்றியது ஏன்? ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

மதுரை,நவ.23 - உலகப் பாரம் பரிய வார விழாவையொட்டி மதுரையில் நேற்று முன்தினம் (21.11.2023) நடந்த தொல்லியல் துறை ஒளிப்படக் கண்காட்சியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தொடங்கி வைத்து பேசு கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல் லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்திருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது’’ என கூறி இருந்தார். 

இந்நிலையில், மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில், ‘‘ஒன்றிய அமைச் சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்அய்) பற்றியும், தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் பெருமையோடு பேசியிருக்கிறார்.

அவருக்கு எனது நன்றி. தமிழ் நாட்டு வரலாற்றின் புதிய திருப்பு முனை கீழடி. ஆனால் இதே ஏஎஸ்அய், கீழடி அகழாய்வை கை விட்டு வெளியேறியது ஏன் என் பதை கூற முடியுமா? இதே ஏஎஸ்அய் கீழடி பற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக் கையை இன்று வரை வெளியிடா மல் வைத்திருப்பது ஏன் என்று கூற முடியுமா? இதே ஏஎஸ்அய் இந்தியாவின் பண்பாட்டு வர லாற்றை எழுத தீர்மானித்த குழு வில் தமிழ்நாட்டு ஆய்வாளர் ஒரு வரை கூட இடம் பெறச் செய்யா தது ஏன் என கூற முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment