கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
2.11.2023
டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்
* தன் மீது வீசப்பட்ட அவதூறுகளை தவிடுபொடி ஆக்குவேன், மகுவா சபதம்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
* தெலங்கானா சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்க ராகுல் எதிர்ப்பு.
* "தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் தொகையை பங்களிப்பவர்கள் யார் என்பதை கூறவில்லை என்றாலும், அவர்கள் எவ்வளவு பங்களித்துள்ளார்கள் என்பதை கண்டிப்பாக காட்ட வேண்டும். இந்த திட்டம் வெளிப்படையாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறோம்’’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பொதுத் தேர்தலுக்கு முன்பு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கைது செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது, மம்தா பகிரங்க குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* அரசுப் பள்ளிகளுக்கு இலவச மின்சாரம், குடிநீர் வழங்கப்படும் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
* அனைத்து ஊடக தளங்களில் உள்ள செய்திகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க தமிழ்நாடு அரசு உண்மை சோதனை பிரிவை உருவாக்குகிறது.
தி இந்து
* மராத்தா இட ஒதுக்கீடு ஆதரவு. அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றம்.
தி டெலிகிராப்
* சி ஆப்பிள் எச்சரிக்கை தொடர்பாக ‘அவசர கூட்டத்தை’ கூட்டுமாறு பிஅய்(எம்) எம்பி ஜான் பிரிட்டாஸ் அய்டி குழு தலைவருக்கு கடிதம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* தமிழ்நாட்டில் மக்கள் விரோத செயல்களில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment