சென்னை, நவ. 27- உச்ச நீதிமன்ற வளாகத்தில் இந்தியாவின் சுவரோவிய மும், அண்ணல் காந்தி யின் சிலையும் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி சந்திர சூட்டின் முயற்சியின் பேரில், உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவ நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டது.
அம்பேத்கரின் சிலை, வழக்குரைஞர் உடையில், 3 அடி, அடித்தளத்தில் 7 அடி உயரத்தில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த சிலையைச் சிற்பி நரேஷ் குமாவத் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி யில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அம்பேத்கர் சிலை திறப்பு குறித்து தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைத் தளப் பதிவு வருமாறு:-
உச்சநீதிமன்ற வளா கத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களது சிலை திறக்கப்படும் இந் தச் சிறப்புமிகு அரச மைப்புச் சட்டநாளில், நமது அரசமைப்புச் சட் டத்தின் நிலைத்த மதி நுட்பத்தைப் போற்று வோம்! அரசமைப்புச் சட்டத்தின் உயர்பண்பு களை நீதித்துறையில் காப்பதற்காக அயராது பாடுபடும் நீதியின் பாதுகாவலர்களுக்கு நமது நெஞ்சார்ந்த வணக் கத்தைச் செலுத்துவோம். அண்ணல் அம்பேத்கருக் குச் சிலை வடிவிலான புகழ்வணக்கம் என்பது வெறும் நினைவுகூர்தல் அல்ல, அது அவர் வகுத் தளித்த நீதி, சமத்துவம் மற்றும் மக்களாட்சி மாண்புகளின் மீது நாம் கொண்டுள்ள பற்றுறுதி யின் அடையாளச் சின் னம் ஆகும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகவலைத் தளப் பதி வில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment