ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் பெற்ற சூரத்தில் கழிவுநீர் தொட்டி மரணம் அதிகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் முதலிடம் பெற்ற சூரத்தில் கழிவுநீர் தொட்டி மரணம் அதிகம்

சூரத், நவ. 16  குஜராத் மாநிலம் சூரத் நகரில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 4 புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூரத் நகரின் பால்சனா பகுதி யில் உள்ள ஒரு சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 14.11.2023 அன்று மாலை பீகாரை சேர்ந்த 4 தொழி லாளர்கள் ஈடுபட்டிருந்தனர். 

2 தொழிலாளர்கள் தொட்டிக்கு உள்ளே இறங்கியபோது மயக்க மடைந்தனர். அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டிய வெளியில் நின் றிருந்த மற்ற இரு தொழிலாளர் களும் மயங்கி தொட்டிக்கு உள்ளேயே விழுந்தனர். 4 பேரும் தொட்டியிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

ஆனால் 4 பேருமே ஏற்கெனவே இறந்துவிட்டதாக அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர நால்வரின் மற்ற அடையாளங் களையும் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. புலம் பெயர்ந்த தொழி லாளர்களுக்கு நேர்ந்த இந்த அவலம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரூ.30 லட்சம் இழப்பீடு

கழிவுநீர் அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந் தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப் பித்தது.  மனிதக் கழிவுகளை மனி தனே அகற்றும் இந்த நடை முறை களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

இந்த பொதுநல வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  நடை பெற்றது. அப்போது, கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழி லாளர்கள் உயிரிழந்தால் அவர் களுக்கு குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர்.  

மேலும், கழிவுநீர் அகற்றும் போது படுகாய மடைந்து, நிரந்தர உடல் பாதிப்பு அடைந்தால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

இந்த நிலையில்  ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களின் தரவரிசை பட்டியலில் சூரத் முதலிடத்தில் உள்ளதாம்.


No comments:

Post a Comment