புதுடில்லி, நவ. 29 - மகளிர் உரிமைத்தொகை திட் டத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து, பொது நல மனுவை தள்ளுபடிசெய்தது.
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு சார்பில் மக ளிருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் மகளிர் உரி மைத்தொகை வழங்கப் பட்டு வருகிறது.
இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பில் வழக்குரைஞர் கள் சி, ஆர்.ஜெயசுகின், நரேந்திரகுமார் வர்மா ஆகியோர் உச்சநீதிமன் றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், 'தமிழ் நாடு அரசு ரூ.7.54 லட்சம் கோடி கடனில் தத்த ளித்து வருகிற சூழலில், ரூ.7 ஆயிரம் கோடி செல வில் வறுமைக் கோட்டில் உள்ள மகளிருக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரி மைத்தொகை திட்டத் தால் மேலும் மாநில பொருளாதாரம் பாதிக் கப்பட்டு கடனில் தத்த ளிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த திட்டத் தில் உண்மையாக பல மாவட்டங்களில் ஏழை எளிய மகளிர் பயன் பெறவில்லை.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அரசியல் வாதிக்கு வேண்டப்பட்ட வர்களுக்கு மட்டும் வழங் கப்பட்டுள்ளது. உண்மை யான பயனாளிகள் தேர்வு செய்யப்படவில்லை. எனவே மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 10ஆம் தேதி வெளியிட்ட அரசாணை சட்ட விரோதம், இயற்கை நீதிக்கு எதிரானது என தெரிவித்து ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கள் பி.ஆர்.கவாய், பிர சாந்த் குமார் மிஷ்ரா ஆகி யோர் அடங்கிய அமர்வு நேற்று (28.11.2023) விசா ரித்தது.
அப்போது மனுதாரர் சார் பில் வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜ ராகி, 'அனைத்து அரசி யல் கட்சிகளும் இலவச திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இது தொடர்பான மனுவை தலைமை நீதிபதி தலை மையிலான அமர்வு ஏற் கெனவே விசாரித்து வரு கிறது.
தமிழ்நாடு அரசு ரூ.7.54 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வரு கிற சூழலில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.7 ஆயிரம் கோடி செலவில் வறுமைக் கோட்டில் உள்ள மகளிருக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரி மைத் தொகை திட்டத் தால் மேலும் மாநில பொருளாதாரம் பாதிக் கப்பட்டு கடனில் தத்த ளிக்கும் சூழல் உருவாகி உள்ளது' என வாதிட்டார். வாதத்தை நிராகரித்த நீதி பதிகள், 'தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறுத்த உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை தள் ளுபடி செய்து' உத்தர விட்டனர்.
No comments:
Post a Comment