‘‘விஷம் சாப்பிடு - லட்ச ரூபாய் தருகிறேன்'' என்றால் சாப்பிட முடியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

‘‘விஷம் சாப்பிடு - லட்ச ரூபாய் தருகிறேன்'' என்றால் சாப்பிட முடியுமா?

தமிழர் தலைவர் ஆசிரியர் ஒன்றிய அரசை நோக்கி விடுத்த கேள்விக் கணை

பாளையங்கோட்டை. நவ.3 ‘‘விஷம் சாப்பிடு - லட்ச ரூபாய் தருகிறேன், என்றால் சாப்பிட முடியுமா?'' என்று ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கேள்விக் கணைத் தொடுத்தார்.

‘தகைசால்' தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் குலத்தொழி லைத் திணிக்கும் சதித் திட்டத்தை எதிர்த்து தொடர் பிரச்சாரப் பயணத்தில் பாளையங்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

பாளையங்கோட்டையில்...

”விஸ்வகர்மா யோஜனா”வா? ”மனுதர்ம யோஜனா”வா? என்ற கேள்வியுடன் நாகப்பட்டினம் தொடங்கி மதுரை வரை நடை பெறவுள்ள 8 நாள் பிரச்சாரப் பெரும் பயணத்தின் ஏழாம் நாளான 2.11.2023 வியாழக்கிழமை அன்று பாளையங்கோட்டையில் தெற்கு பஜார், லூர்து நாதன் சிலை அருகிலும், தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகிலும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பாளையங் கோட்டையில் மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில், பாளை பகுதித் தலைவர் செ.தர்மராஜ் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார். மாவட்டக் காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, சி.டேவிட் செல்லத்துரை, மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர் செ.சந்திரசேகரன், ப.க. செயலாளர் க.திருமாவளவன், தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், செயலாளர் வே.முருகன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணி, செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாநகரத் தலைவர் பி.இரத்தினசாமி, செயலாளர் ம.வெயிலுமுத்து ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மேனாள் சட்டப்பேரவைத் தலை வரும், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான இரா.ஆவுடையப்பன் பயணம் வெற்றி பெற வாழ்த்தி உரை யாற்றினார். 

தி.மு.க. சட்ட திட்டக்குழு உறுப்பினர் சுப.சீத்தாராமன், மேனாள் அமைச்சரும் திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப் பாளருமான டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், ம.தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன்,இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் கே.சங்கரபாண்டியன், கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் பேரா.சுப.சோமசுந்தரம், தி.இ.த. பேரவை மாநில மாணவர் கழகச் செயலாளர் நெல்லை பாபு, வி.சி.க. மாநகர் மாவட்டச் செயலாளர் முத்து வளவன், சி.பி.அய். மாவட்டச் செய லாளர் சடையப்பன், தி.மு.க. பேச்சாளர் நெல்லை முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடக்கத்தில் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற் றினார். மழை மிரட்டிக்கொண்டிருந்தது. மக்கள் கடையோரங்களில் நின்றிருந்தனர். குடை வைத்திருந்த ஓரிருவர் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.  ஊடகவியலாளர்கள் குடைகளுடன் படப்பதிவு கருவிகளை இயக்கிக் கொண்டிருந்தனர். 6 மணிக்கு ஆசிரியர் மேடைக்கு வருகை தந்தார்.  ஒதுங்கியிருந்த மக்கள் மெதுவாக நாற்காலிகளுக்கு திரும்பிக் கொண்டி ருந்தனர். மேனாள் சட்டப் பேரவைத் தலைவர் பேசிய பிறகு புத்தகம் வெளியிடப்பட்டது. 

தொடர்ந்து ஆசிரியர் உரையாற்றினார். 

தமிழர் தலைவர் உரை

அவர் தனது உரையில், “ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமான பா.ஜ.க. மூட நம்பிக்கைகள் அதிகம் உள்ள அமைப்பு” என்றார். ‘‘அதனால்தான் 18 ஜாதிகளை மோடி தேர்ந்தெடுத்து, யார், யார்? என்று பெயருடன் படம் போட்டுக் காட்டியிருக்கிறார்” என்று ஒன்றிய அரசு வெளியிட்ட விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு போடப்பட்ட புத்தகத்தைக் காட்டினார். “விஸ்வகர்மா யோஜனா என்றால் எதோ, பத்தர், ஆசாரி என்று தவறாக எண்ண வேண்டாம். விஸ்வகர்மா என்றால் எல்லா ஜாதிகளையும் குறிப்பிடுகின்ற வடநாட்டுச் சொல், அவ்வளவுதான்” என்று அந்தச் சொல்லுக்கு பொருள் சொன்னார். ‘‘இது மோடியின் முகமூடி; ஜாதித் தத் துவத்தை கல்வி மூலம் ஆணியடிக்கச் செய்வது; மூளையில் போடப்படும் விலங்கு; இதை மொத்தமாக அடித்து நொறுக்க வேண்டும்; அதற்குத் தேவை திராவிடம்! என்று நூல் பிடித்தது போன்று ஆரியத்தின் கேட்டை விளக்கினார். தொடர்ந்து திராவிட இயக்கம் கல்விக்காக செய்த அளப்பரிய சாதனைகளை பட்டி யலிட்டார். மோடி கொண்டு வரும் குலக்கல்விக்கான தகுதிகள் என்னென்ன? என்பதையும் பட்டியலிட்டார். இதற்காக கடன் கொடுப்பதை சுட்டிக்காட்டி, “விஷம் கொடுக்கிறேன் சாப்பிடு லட்சம் ரூபாய் தருகிறேன் என்றால் சாப்பிட முடியுமா?” என்ற ஆழமான கேள் வியை மக்கள் முன் வைத்தார். ஒருவழியாக மழை நின்று நாற்காலிகள் அனைத்திலும் மக்கள் அமர்ந்திருந் தனர். அதைக்கண்டு, “மழையும் நமக்கு ஒத்துழைத் திருக்கிறது!” என்றார். மோடிக்கு ஒத்து வராதவர்களை திரிசூலம் கொண்டு தாக்குவதைக் குறிப்பிட்டு, சி.பி.அய்., வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவைதான் அந்த திரிசூலங்கள் என்று நகைச்சுவையாக சுட்டிக் காட்டினார். அதைத்தொடர்ந்து இந்த அக்கிரமங்களை கண்டிக்கும் வண்ணம், “இதென்ன சர்வாதிகார நாடா? இறுதி அதிகாரம் மக்களுக்குத்தான்” என்று கூறி, ”2024 தேர்தல் அதற்கு பதில் சொல்லும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார். முன்னதாக மேனாள் சட்டப்பேரவைத் தலைவர், மேயர் ஆகியோர் வருகை தந்து கடமையை செய்தததற்கு வாழ்த்தினார். பாளை பகுதிச் செயலாளர் ப.பாலகிருட்டிணன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

தூத்துக்குடியில்...

தூத்துக்குடி நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையேற்க, செயலாளர் கோ.முருகன் வரவேற்புரை நல்கி னார். கழகக் காப்பாளர்கள் மா.பால் ராசேந்திரம், சு.காசி, வி.சிக. வடக்கு மாவட்டச் செயலாளர் ஆட்டோ கணேசன், ம.தி.மு.க. மீனவரணி நக்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு பெ.கீதா ஜீவன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் தி.மு.க. மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக ஆசிரியர் உரையாற்றினார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

அவர், ‘‘ஒரு நகரம், கிராமம் அல்லது ஊராட்சி என்கிற அளவில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று இந்த கருத்துகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மேற்கொண் டிருக்கிறோம்’ என்று இந்த பிரச்சாரம் இயங்கும் முறை பற்றி கூறி னார். ஆசிரியர் பேசிய சிறது நேரத்தில் வருகை தந்த அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் நேற்று தனது மணி விழாவைக் கொண்டாடி இருக்கிறார் என்று கேள்விப்பட்டு பாராட்டினார். அவரையும் சிறிது நேரம் பேசச் சொல்லி, பேசிய பிறகு தொடர்ந்தார்.  அமைச்சர் பேசிய திலிருந்து, விஸ்வகர்மா திட்டத்தில் சேர ஜாதி சான்றிதழ் எதற்கு?” என்ற சொற்றொடரை எடுத்துக்கொண்டு, அமைச்சரை அதற்காகவும் பாராட்டிவிட்டு, தனது வாதங்களோடு அதைப் பொருத்திக்காட்டி மக்களுக்கு விளக்கினார். முன்னதாக அமைச்சர் வந்தவுடன் முதலமைச்சர்களின் திராவிடப் பிரகடனங்கள் புத்தகம் வெளியிடப்பட்டது அமைச்சர் புத்தகங்களை வாங்கி அங்கேயே கூட்டத்திற்கு வந்திருந்த மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தார், மக்கள் ஆவலுடன் பெற்றுக் கொண்டனர். 

ஆசிரியர் அவர்கள், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் கூட சர்ச்சைக்குள்ளானது என்பதை - செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள்; முன்னதாக விஸ்வகர்மா வால்மீகியின் பிறந்தநாள் என்று சொல்லப்பட்டது. தற்போது அது மோடியின் பிறந்த நாளாகவும் சொல்லப்படுகிறது என்ப தைக் குறிப்பிட்டு, தேதியில் சர்ச்சை உள்ளதை சுட்டிக்காட்டினார். பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். இரண்டும் தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பல்வேறு தொல்லை களைக் கொடுத்து வந்தாலும் முதலமைச்சர் மிகவும் பொறுமை காக்கிறார் என்று சொல்லிவிட்டு, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற கிராமியப் பழமொழியை நினைவூட்டி,   ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி 6 மாதத்தில் முடிவுக்கு வரும். அப்போது எல்லா பிரச்சினை களும் முடிவுக்கு வரும்'' என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில் ப.க. மாவட்டத் தலைவர் ச. வெங்கட்ராமன், மாநகரத் தலைவர் அ.மதிவாணன், ப.க. மாநகரச் செயலாளர் சு.புத்தன், மாவட்ட இளைஞரணித் தலைவர் தி.இல.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.நவீன்குமார், மாநகரத் தலைவர் த.பெரியார் தாசன், மாநகர செயலாளர் செ.செல்லத்துரை, மாவட்டத் தொழிலாளரணி அமைப்பாளர் த.நாகராஜன், மாவட்ட ப.க. அமைப்பாளர் மோகன்தாஸ், ப.க.மாவட்டத் துணைத்தலைவர் த.செல்வராஜ், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் செ.வள்ளி, மாவட்ட மாணவர் கழகத் துணைத் தலைவர் ஆ.கலைமணி, மாவட்ட துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாவட்டத் துணைச் செயலாளர் சி.மணிமொழியன், விளவை ஒன்றியத் தலைவர் 

மு.பாலமுருகன், திருவை ஒன்றியத் தலைவர் சு.திரு மலை குமரேசன், வழக்குரைஞர் பா.இராசேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாநகர மாணவர் கழகத் தலைவர் 

இ.ஞா.திரவியம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.


No comments:

Post a Comment