கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 5, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.11.2023

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

👉அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவர்களை அடித்த வழக்கு, பா.ஜ.க. நடிகை கைது. நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉மோடி ஆட்சியில், ஆளுநர்கள் காலனித்துவ கால கவர்னர் ஜெனரல்களாக மாறிவிட்டனர். இப்போது எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் மசோதாக் களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது, அரசமைப்பை கேலிக் கூத்தாக்குகிறது மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியின் இதயத்தை வெட்டுகிறது  என ராமச்சந்திர குகா கண்டனக் கட்டுரை.

👉நாட்டில் ஏழைகள் மட்டுமே ஜாதி என்று சொன்ன பிரதமர் நரேந்திர மோடி ஏன் தன்னை ஓபிசி என்று அடையாளப்படுத்துகிறார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

தி டெலிகிராப்:

👉 மணிப்பூரில் பல மாதங்களாக நெருக்கடி நீடித்து வருவதும், அது குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதும், இந்த ‘டபுள் இஞ்சின் சர்க்கார்’ முற்றிலும் தோல்வி அடைந்ததன் அடையாளம் என ஜான் பிரிட்டாஸ், எம்.பி. குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 நவம்பர் 20ஆம் தேதிக்கு பிறகு ஜாதி வாரி கணக் கெடுப்பை நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉நீதிமன்ற தீர்ப்பை சட்டப்பேரவை ரத்து செய்ய முடியாது: தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment