ஊடகங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததில் என்ன தவறு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

ஊடகங்களில் வெளிவரும் தவறான செய்திகளை கண்டறிய உண்மை சரிபார்ப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததில் என்ன தவறு?

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

சென்னை, நவ. 21-  தவறான செய்திகளை கண்டறிய, தமிழ் நாடு அரசு உண்மை சரிபார்ப் புக் குழு அமைத்ததில் என்ன தவறு உள்ளது என மனுதார ரான அதிமுக நிர்வாகிக்கு கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இக்குழு நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை டிச.6-க்கு தள்ளிவைத்துள்ளது.

அனைத்து ஊடக தளங்களி லும் தமிழ்நாடு அரசு, அமைச்ச கங்கள் மற்றும் துறை தொடர் பாக வெளிவரக்கூடிய தவறான பொய்ச் செய்திகளை கண்டறி யும் வகையில், தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அம லாக்கத் துறையின்கீழ் ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத் துள்ளது.

இக்குழுவின் திட்ட இயக்கு நராக அய்யன் கார்த்திகேயனை தமிழ்நாடு அரசு நியமித்துள் ளது. இவருக்கு மாத சம்பள மாக ரூ.3 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உண்மை சரி பார்ப்புக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசா ணையை எதிர்த்து அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளரான சி.டி.நிர்மல் குமார், சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20.11.2023) விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசுக்கே அதிகாரம்

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் விஜய் நாரா யண், வழக்குரைஞர் அய்.எஸ்.இன் பதுரை ஆகியோர் ஆஜராகி, “உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது. 

மாநில அரசுக்கு கிடை யாது. இதுதொடர்பாக ஒன் றிய அரசு கடந்த 2021ஆ-ம் ஆண்டிலேயே விதிகளை வகுத் துள்ளது.

தற்போது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள இந்தக் குழு தகவல் தொழில்நுட்ப விதி களுக்கு முரணானது.

இக்குழுவின் திட்ட இயக்கு நர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசின் நட வடிக்கை பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத் துக்கு எதிரானது. உண்மை சரிபார்ப்புக் குழு என்பது அரசின் கையில் உள்ள ஆபத் தான ஆயுதமாகிவிடும்” என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள், “பொய்ச் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க மாநில அரசு இதுபோல நடவ டிக்கை எடுக்க முடியாதா? இதுவும் ஒரு சரிபார்ப்பு முறைதானே? இதில் என்ன தவறு உள்ளது? காவல் துறை யினருக்கு உதவும் விதமாகத் தானே இந்தக்குழு அமைக்கப் பட்டுள்ளது” என கேள்வி எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், “பொய்ச் செய்தி பரப்பியதாக மனுதாரர் மீது ஏற்கெனவே குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த தகுதியும் கிடையாது” என்றார்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்குரைஞரான பி.எஸ்.ராமன், “தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக் கப்பட்டதாக தவறான செய்தி கள் சமூக ஊடங்களில் பரப் பப்பட்டதால் வடஇந்தியர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. 

அதுபோன்ற சூழல் மீண் டும் வரக்கூடாது என்பதற் காகத்தான் தகுதியான நபரின் தலைமையின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை” என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இதுபோன்ற உண்மை சரிபார்ப் புக் குழுவை ஒன்றிய அரசும் நியமித்துள்ளது.

அதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கின் தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள் ளது. அந்த வழக்கின் முடிவை தெரிந்து கொண்டு அதன்பிறகு இந்த வழக்கை விசாரிப்போம் எனக் கூறி விசாரணையை டிச. 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள் ளனர்.

No comments:

Post a Comment