பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்

சென்னை, நவ. 16 -  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) கடந்த மாதம் வெளியிட்டது.

அதன் படி போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வரும் 30ஆ-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம்.

ஏராளமானோர் விண்ணப் பித்து வருகின்றனர். இந்நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக் கையை 2,582ஆக உயர்த்தி டிஆர்பி நேற்று (15.11.2023) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை மாநகராட் சியில் 86 பணியிடங்கள், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாகச் சேர்க் கப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment