ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் தாக்கு
ஜெய்ப்பூர்,நவ.21- ஒலிம்பிக் பதக் கம் வென்ற மல்யுத்த வீராங் கனைகளை ஆதரிக்காமல் அவர் களுக்கு எதிராக இருந்தவர் பிர தமர் மோடி என்று ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் கவுரவ் வல்லப் விமர்சனம் செய் துள்ளார்.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் வல்லப் பேசியதாவது,
“மற்ற மாநிலங்களைவிட ராஜஸ்தானில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அதற்கு காரணம் ராஜஸ்தானில் புகார் கொடுக்க வருபவர்களின் அனைத்து புகார்களையும் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் பெரிய குற்றங்களுக்கு கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் மூடி மறைத்து விடுவார்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்த தில்லை. ஆனால் பாஜக எப் போதும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை ஆதரித்தே வந்துள் ளது. பிரிஜ் பூஷன் சிங் வழக்கில் பாஜக எப்படி நடந்துகொண்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.
ஒலிம்பிக் பதக்கம் வென்று தந்த மல்யுத்த வீராங்கனைகள் பாஜக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் புகார் அளித்தபோது, மல்யுத்த வீராங்கனைகளை ஆதரிக் காமல் அவர்களுக்கு எதிராக இருந் தவர் பிரதமர் மோடி. குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கை பாதுகாப்பதில் மட்டுமே அவர் அக்கறை செலுத்தினார்.
தற்போது பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் பிரதமர் மோடி ஏன் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நிற்கவில்லை. ஆனால் காங்கிரஸ் எப்போதுமே பெண் களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது'' என்று பேசினார்.
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 73 தொகுதிகளில் வெற்றி பெற்ற பிஜேபி எதிர்க்கட்சி ஆனது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment