தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?'' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?'' எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில் வாய் கொப்பளிக்கவேண்டும்'' என்று நினைத்தவர்கள்!

இப்பொழுது அவர்கள் சமூகநீதியைப்பற்றி பேசுவது வித்தைக்காகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும்!

ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும்

சென்னை, நவ.16   சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில் வாய் கொப்பளிக்கவேண்டும்'' என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அவர்களையும் தாண்டி, அவர்கள் சொல்வது வித்தைக்காகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஓநாய் சைவத்தைப்பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டம்

கடந்த 8.11.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.

அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

Prime Minister Narendra Modi has asserted that for his government “social justice is a firm commitment” and it has put the welfare and development of the poor, Backward Classes, SC/STs on the top priority with the various schemes attuned to benefit them the most across the country.

“We have 27 OBC ministers in the Centre for the first time after Independence. There are 85 OBC MPs, 365 OBC MLAs and 65 OBC MLCs. No other party can do it. Parties like the Congress and BRS will not allow the BCs and other weaker sections to develop or give them decision making roles,” he charged.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி தனது அரசாங்கத்தின் நோக்கம்  ‘‘நாடு முழுவதும் சமூக நீதி என்றும், அதுவே எனது அரசின் அர்ப்பணிப்பு” என்றும், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர்,  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டிற்கு முதலிடம் கொடுத்துள்ள தாகவும், பல்வேறு திட்டங்கள் மூலம் அவர்களுக்கு அதிக பயன் அளிக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக 27 இதர பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள்  உள்ளனர். 85 இதர பிற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், 365 இதர பிற்படுத்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 65 இதர பிற்படுத்தப்பட்ட சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளனர்.

இதுபோல் வேறு எந்தக் கட்சியும் செய்ய முடியாது. காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். போன்ற கட்சிகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற நலிந்த பிரிவினரை முன்னேற்றவோ அல்லது அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வழங்கவோ மாட்டார்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது!

சமூகநீதி - ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்று அந்த வார்த்தையை உச்சரித்தால்கூட ‘‘தீட்டாகிவிடும்; கங்கா ஜலத்தில் வாய் கொப்பளிக்க வேண்டும்'' என்று நினைத்தவர்களுக்கு, இப் பொழுது அவர்களையும் தாண்டி, அவர்கள் சொல்வது வித்தைக்காகத்தான் என்று எல்லோ ருக்கும் தெரியும். ஓநாய் சைவத்தைப்பற்றிப் பேசினால் எப்படி இருக்கும்? ஓநாய் ஒருபோதும் சைவம் ஆகாது என்று அனைவருக்கும் தெரியும்.

ஆந்திராவில் நடைபெற்ற மாநாட்டிற்கு என்ன பெயர் தெரியுமா?

Addressing a ‘Self respect for BCs’ public meeting at the Lal Bahadhur Stadium at Fatehmaidan in Hyderabad on Tuesday, Mr. Modi affirmed that It is only BJP and the NDA (National Democratic Alliance) which has given pride of place to the BCs and other weaker sections giving several prominent posts like the President -Dr. Abdul Kalam, Ramnath Kovind and now Draupadi Murmu - Lok Sabha Speakers like GMC Balayogi and others.

He explained about providing constitutional status to National Commission for BCs, quota in the Central educational institutions and the likes. Flagship schemes like toilets construction, housing under the PMAY, Ayushman Bharat medical insurance, PM Vishwakarma Yojana and others directly benefit the BCs for them to lead a ‘life of dignity and self-respect’, he noted.

இதன் தமிழாக்கம் வருமாறு:

அய்தராபாத்தில் உள்ள பதேமைதானில் உள்ள லால் பகதூர் ஸ்டேடியத்தில் ‘பிற்படுத்தப்பட்டோர் உரிமை முழக்கம்‘ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திரு.மோடி, இதர பிற்படுத் தப்பட்ட மற்றும் நலிந்த அனைத்து பிரிவு மக்களுக் காகவும் பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மட்டுமே உழைக்கிறது. பழங்குடியினருக்கு  குடியரசுத் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளை வழங்கு கிறார்கள். டாக்டர் அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த் மற்றும் இப்போது திரவுபதி முர்மு  மற்றும் மக்களவைத் தலைவர் பாலயோகி  போன்றவர்களோடு பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு அர சமைப்புத் தகுதி வழங்குவது, ஒன்றிய கல்வி நிறுவனங் களில் ஒதுக்கீடு மற்றும் பலவற்றை அவர் விளக்கினார். கழிப்பறைகள் கட்டுதல், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள், ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு, ‘விஸ்வகர்மா யோஜனா’மற்றும் பிற முதன்மைத் திட்டங்கள்  போன்றவற்றால் அவர்கள்  ‘கண்ணியம் மற்றும் சுயமரியாதையோடு’ வாழ்வதற்கு வழிவகுத்துள் ளோம், என்று மோடி குறிப்பிட்டார்.

பெரியார் இப்பொழுது 

அங்கேயும் போயிருக்கிறார்!

நம்முடைய முதலமைச்சர் பேசுகிறார் அல்லவா சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்று. அதுபோன்று தாங்களும் பேசவேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்கள். ஆக, பெரியார் இப்பொழுது எங்கே 

போயிருக்கிறார் என்பதைப் பாருங்கள்.

அஞ்சாநெஞ்சன் அழகிரி  சொன்னதை நாங்கள் அடிக்கடி சொல்வோம், 

‘‘ஈட்டி எட்டிய வரையிலே பாயும் -

பணம் பாதாளம் வரையில் பாயும் -

ஆனால், எங்கள் தலைவர் பெரியார் அவர்களுடைய கொள்கைகளோ, அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனை யிலும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்‘’ என்று.

டெபாசிட் வாங்கமாட்டோமோ? நோட்டாவை தாண்டமாட்டோமா? என்று நினைக்கிறார்கள்!

அதுபோன்று தங்களை அறியாமல், அவர்கள் வேஷத்திற்காக சொல்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரியும். ஆனால், சொல்லியாகவேண்டும். அப்படி சொன்னாலாவது நாம் டெபாசிட் வாங்கமாட்டோமா? அப்படி சொல்லியாவது நோட்டாவை தாண்டமாட் டோமா? என்று அப்படி சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது என்றால், அய்யா பாலச்சந்திரன் சொன்னதுபோன்று, ‘‘நாடு எங்கே செல்லுகிறது?’’ என்றால், இங்கே செல்லுகிறது -  சமூக அநீதிக்கு அடையாளமான பி.ஜே.பி.க்கு எதிராக செல்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய தத்துவத்தில் மாநில உரிமையைப்பற்றி சொன்னார்; ஜி.எஸ்.டி.பற்றி சொன் னார் நம்முடைய அய்யா பாலச்சந்திரன் அவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நமக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்  நட்டம்.

நம்மிடமிருந்து வரியாக வசூலித்து, ஒன்றிய அரசுக்கு எவ்வளவு போகிறது என்பதைப்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் சொன்னார். நம்மிட மிருந்து ஒரு ரூபாய், ஒன்றிய அரசு வாங்கினால், நமக்குத் திரும்பக் கிடைப்பது 29 காசுதான் என்று.

இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொன்ன பிறகுகூட, இன்றைக்கு நாம் எப்படி ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தவுடன், மாநில உரிமைகள் எங்கே? என்கிற உரிமை முழக்கம் பல மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிர மாணம் எடுத்தீர்கள். ஆனால், அந்தப் பிரமாணத்தைக் காப்பாற்றவில்லையே! இதற்கெல்லாவற்றிற்கும் என்ன காரணம்?

பண பலம் - அதிகார பலம் - 

ஊடக பலம்!

அதுபற்றி மிக அழகாகச் சொன்னார் அய்யா பாலச் சந்திரன் - அதை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

Money Power - Muscle Power - Media Power

பண பலம் - அதிகார பலம் - ஊடக பலத்தை வைத்துக்கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்வோம்; வன்முறையை ஏவிவிடுவோம் என்கிறார்கள்.

சுற்றுப்பயணத்தின்போது நான் வேடிக்கையாக ஒரு கூட்டத்தில் சொன்னேன், தேர்தலில் நிற்கின்ற எதிர்க் கட்சிகள் தேர்தல் செலவுக்குப் பணம் வேண்டுமே என்று கவலைப்படுகிறார்கள். ஆனால், பி.ஜே.பி.யைப் பார்த்து, மோடியைப் பார்த்து, உங்கள் கட்சியின் தேர்தல் செலவுக்குப் பணம் என்று கேட்டால், ‘‘உடனே மோடி திரும்பிப் பார்ப்பார்; பக்கத்தில் அதானி உட்கார்ந் திருப்பார். ‘அதான் நீ' என்று கையைக் காட்டினால் தீர்ந்து போய்விட்டது. ‘அம்பா நீ' என்று கையைக் காட்டினால் தீர்ந்து போய்விட்டது.

The Crooked Timber of New India: 

Essays on a Republic in Crisis

அந்த அளவிற்கு வாய்ப்புகள் வரக்கூடிய சூழல் இன்றைக்குத் தெளிவாகிவிட்டது. இதையும் தாண்டி வெற்றி பெற முடியுமா? என்று கேட்டால், வெற்றி பெற முடியும். இதை நாம் சொல்லவில்லை - இதோ இந்தப் புத்தகம் -    The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis  என்ற தலைப்பில் எழுதியுள்ளார் பொருளாதார நிபுணரான பர்காலா பிரபாகர் அவர்கள்.

(தொடரும்)



No comments:

Post a Comment