நான்காண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை- ஆனால், மதுரை எய்ம்ஸ் பேராசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

நான்காண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை- ஆனால், மதுரை எய்ம்ஸ் பேராசிரியர்களுக்கு நேர்முகத் தேர்வாம்!

மதுரை, நவ.4- பிரதமர்மோடி அடிக்கல் நாட்டி 4 ஆண்டுகள் ஆகியும் பணிகள் தொடங்கப் படாமல் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்ட மதுரைஎய்ம்ஸ்க்கு பேராசிரியர்கள், விரிவுரையா ளர்களுக்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டப்படும் எனகடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2023 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறி விக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குமேலாகியும் கட்டுமானப் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது.

10 கோடி ரூபாய் செலவில் 5 கிலோ மீட்ட ருக்கு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாண வர்கள் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்துவருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் எய்ம்ஸ் நிர்வாக அலுவலகம் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மருத்துவ கட்டு மானப் பணிகளை மேற்கொள்ள நிறுவனங் களைத் தேர்வு செய்ய ஒப்பந்தம் விடப்பட்டு, அந்த ஒப்பந்தப் பணிகளும் நிறைவடையாமல் உள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கான மருத்துவ பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், நிர்வாக அதிகாரிகளுக்கான நேர் முகத்தேர்வு கடந்த 2.11.2023 அன்று இயக்குநர் அனுமந்தராவ் தலைமையில் நடைபெற்றது.

இதில்,பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவர்கள்நேரடி தேர்வு மூலமாகவும், ஒரு சில பணியிடங்களுக்கு இணையம் மூல மாகவும் கலந்து கொண்டனர். கட்டுமானப் பணிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளி யாகாமல் உள்ள நிலையில் தேர்வு மட்டும் நடத்தப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத் தியுள்ளது.

No comments:

Post a Comment