பொது இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடக்கிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

பொது இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடக்கிறது

சென்னை, நவ.12 தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் தொழு நோய் விழிப்புணர்வு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் நோயின் அறிகுறிகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் தொழு நோயை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தொழுநோயின் முக்கிய அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்க ளிடம் ஏற்படுத்த தமிழ்நாடு நல் வாழ்வுத் துறை ஒரு மாத கால முயற்சியைத் தொடங்கியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தொழுநோய் மருத்துவர்கள் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,000 புதிய தொழுநோயாளிகள் பதிவாகி யுள்ளனர். தற்போது, 2,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழுநோயை ஒழிப்பதை நோக்கி நாம் நகர்ந்து கொண் டிருக்கிறோம். 2027ம் ஆண்டிற் குள் புதிய பாதிப்புகளை 70 சத வீதம் குறைப்பதும், குழந்தை களுக்கான பாதிப்புகள் மற்றும் குறைபாடுகளை 90சதவீதம் குறைப்பதும் இலக்கு. தொழு நோயைக் குறைக்க பொது மக்களின் ஆதரவு மிக முக்கியமானது. தொழுநோயின் முக்கிய அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். உணர்வு இழப்பு, தோல் நிறமாற்றம், புற நரம்புகள் தடிமன் ஆவது மற் றும் தோலில் தோற்றம் மாறுவது ஆகியவை தொழுநோய்க்கான அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் தென் பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும் பிற அறிகுறிகளும் உள்ளன அவை தோல் பளபளப்பாவது, உடல் முழுவதும் காது மடல்கள் மற்றும் நிரம்புகள் தடித்தல், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு மற்றும் கைகால்களின் சிறிய தசைகளின் பலவீனம் மற்றும் கண் இமைகளை மூட இயலாமை போன்றவை அடங் கும். பொதுமக்கள் தாமாக முன் வந்து அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகி பரிசோ தனை செய்து கொள்ள வேண் டும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் மேலாண்மை குறைபாடு களை தடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.


No comments:

Post a Comment