கடுமையான உடற்பயிற்சி - ஒன்றிய அமைச்சரின் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

கடுமையான உடற்பயிற்சி - ஒன்றிய அமைச்சரின் எச்சரிக்கை!

கரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாரடைப் பால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக இளம் வயதினர் (20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டோர்) மாரடைப்பால் உயி ரிழப்பது அதிகரித்துள்ளது.

உடல்நலம் நன்றாக இருக்கக்கூடிய இளைஞர் களுக்கு, திடீரென மாரடைப்பு ஏற்படுவது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இதற் கெல்லாம் என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில், குஜராத் மாநிலத்தில் பிரபலமான ‘கார்பா’ நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கார்பா நடன கொண்டாட்டங்களின் போது மாநிலத்தில் மட்டும் 22 பேர் கெட்ட வாய்ப்பாக, மாரடைப்பால் உயிரிழந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்புகள் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் செய்தி யாளர்கள் கேள்வி யெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கரோனா பெருந்தொற்றுக்கு ஆளானவர்கள் குறித்து ஒரு விரிவான ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

அதில், கரோனா பெருந் தொற்றுக்கு ஆளானவர்கள் தங்கள் உடலை அதிகம் வருத்திக் கொள்வது ஆபத்தை விளைவிக்கலாம் என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தீவிர கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப் பட்டவர்கள், சுமார் 2 வருடங்கள் வரை உடலுக்கு அதிக சிரமம் தரும் உடற்பயிற்சியிலோ அல்லது கடின உழைப்பு தேவைப்படும் செயல்களிலோ ஈடுபட கூடாது. இதனால் மாரடைப்பு வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது.

 இவ்வாறு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment