பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினர்கள் இடையேயான செயற்கை நுண்ணறிவு - சுய விழிப்புணர்வு நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 9, 2023

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வளரிளம் பருவத்தினர்கள் இடையேயான செயற்கை நுண்ணறிவு - சுய விழிப்புணர்வு நிகழ்வு

வல்லம், நவ. 9 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை, சவுமனாஸ்யா மனநல மருத்துவமனை மற்றும் பிஷப் ஹீபர்  மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி வளரிளம் பரு வத்தினர்கள் இடையே செயற்கை நுண்ணறிவு பற்றி சுய விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ் சியில் இரண்டாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி செல்வி சு.கலை வாணி வரவேற்புரை வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து பள்ளி துணை தலைமை ஆசிரியர் சார்லஸ் அவர் கள் தலைமையேற்று இந் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

மேலும் கருத்துரை வழங்க வந்த டாக்டர் ஆருத்துரா கோபால கிருஷ்ணன் வளரிளம் பருவத்தினரிடையே செயற்கை நுண்ணறிவு பற்றி மாணவர்களுக்கு இயந்திரங்கள் மற்றவர் களின் உணர்ச்சிகள் மற்றும் மனநிலைகளை மட்டுமல்ல, அவற்றின் சொந்த நிலைகளையும் அறிந்திருக்கும் மற்றும் அதே தேவைகள், ஆசை கள் மற்றும் உணர்ச்சிக ளைக் கொண்ட மனித நுண்ணறிவுக்கு சமமாக AI நமக்கு இருக்கும் என்பதான கருத்துகளை வழங்கினார். அவரின் கருத்து மிகவும் சிறப்பாக இருந்தது என்று அப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறினார்.

இறுதியாக, இரண் டாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவி, செல்வி. மேகலட்சுமி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 70 -க்  கும் மேற்பட்டோர் கலந் துக் கொண்டு பயன் பெற் றனர். 

No comments:

Post a Comment