பகுத்தறிவாளர் கழகம் திருவொற்றியூர் மாவட்டம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

பகுத்தறிவாளர் கழகம் திருவொற்றியூர் மாவட்டம் தொடக்கம்

29-10-2023 காலை 11:00 மணிக்கு திருவொற்றியூரில் பகுத்தறிவாளர் கழக புதிய மாவட்டம் சிறந்த முறையில் தொடங்கப்பட்டது.

தமிழர் தலைவரின் செடி - கொடி - படி என்ற கூற்றுப்படி முதலில் செடி நடப்பட்டது - கொடி ஏற்றப்பட்டது - படிக்க அனைவருக்கும் சிறிய நூல்கள் வழங்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்

தலைவர் : கு.ஆசைத்தம்பி

செயலாளர் : பி.எஸ்.சைலஸ்

துணை தலைவர் : ஆ. சாமுண்டீஸ்வரி

துணைச் செயலாளர் : ச.தமிழ்செல்வி

பிறகு கலந்துகொண்டோரின் அறிமுகம் நடந்தது.

வரவேற்புரையில் பி.எஸ்.சைலஸ் வழங்க, 

கு.ஆசைத்தம்பி தலைமையில் கூட்டம் துவங்கியது.

கலந்துரையாடல் வெவ்வேறு இடங்களில் நடக்க வேண்டும் என்று கருத்துரை வழங்கினார்கள். பகுத்தறிவாளர் கழக வினாக்குறிபோட்ட சின்னம் பற்றி தோழர் கேட்ட வினாவுக்கு மாநில தலைவர் சிறந்த முறையில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளித்தார்.

மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் பேசும்போது:-

இந்த மாவட்டம் உதயமாக சிறந்த முறையில் ஒத்துழைப்பை வழங்கிய திராவிடர் கழக தோழர்கள் ஒளிவண்ணன், சதீஸ்குமார் அவர்களுக்கு நன்றி பாராட்டினார்.

மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தனது கருத்துரையில்:- 

பகுத்தறிவு என்றால் என்ன, பகுத்தறிவாளர் கழகம் ஏன் என்றும், எப்படி பகுத்தறிவு கருத்துகள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விளக்கமாக பேசினார்.

கலந்துரையாடல் மாதம்தோறும் நடக்க வேண்டும்.

பயிற்சிப் பட்டறைகள் நடத்த வேண்டும்.

மந்திரமா? தந்திரமா?

போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும், இந்த மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் நூறு உறுப் பினர்கள் சேர்க்க வேண்டும் என்று பேசினர்.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு சிறப் பித்தவர்கள் :

தே.செ.கோபால் - தலைமை கழக அமைப்பாளர்

வெ.மு.மோகன் - திருவொற்றியூர் கழக தலைவர்

இரா.சதீஸ்குமார் - திருவொற்றியூர் கழக இளைஞர் அணி தலைவர்

இளங்கோ - மூத்த உறுப்பினர்

மு.காளியப்பன் - மூத்த உறுப்பினர்

நன்றியுரையில் திருவொற்றியூர் துணைத் தலைவர் ஆ.சாமுண்டீஸ்வரி அவர்கள் பகுத் தறிவாளர் கழகம் என்றல் என்ன, அதன் நோக்கங்கள் என்ன என்பதை இப்பொழுதுதான் அறிந்தோம். 

முக்கியமாக இக்கருத்துகள் பெண்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அதற்கு பெரிய அளவில் முயற்சி எடுத்து பெண்களை உறுப்பினர்களாக சேர்க்க பாடுபடுவேன் என்று நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment