ஒரு காலகட்டத்தில் மனுவாக இருக்கும்; இன்னொரு காலகட்டத்தில் அது இராஜகோபாலாச்சாரியாராக இருக்கும்; இன்னொரு காலகட்டத்தில், அது மோடியாக இருக்கும்; ஆர்.எஸ்.எஸாக இருக்கும்!
தனி நபர்கள் முக்கியமல்ல; அவர்களின்
சித்தாந்தங்களும், தத்துவங்களும் ஆபத்தானவை!
சென்னை, நவ.14 ஒரு காலகட்டத்தில் மனுவாக இருக்கும். இன்னொரு காலகட்டத்தில் அது இராஜ கோபாலாச்சாரியாராக இருக்கும்; இன்னொரு கால கட்டத்தில், அது மோடியாக இருக்கும்; ஆர்.எஸ்.எஸாக இருக்கும். ஆகவே, தனி நபர்கள் முக்கியமல்ல; அந்த சித்தாந்தங்களும், தத்துவங்களும் ஆபத்தானவை. எப்படி நோய் வெவ்வேறு பெயர்களில் வருகிறதோ, வெவ்வேறு காலகட்டங்களில் வருகிறதோ, அதேபோலத் தான், இந்தப் போராட்டங்களும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டம்
கடந்த 8.11.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் நடைபெற்ற ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?’’ சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.
அவரது நிறைவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
குடிமக்களுடைய அரசாக இருக்கவேண்டும்!
ஜனநாயகத்தில்கூட வேறு விதமாக இருக்கக்கூடாது; அது குடியரசாக இருக்கவேண்டும். குடிமக்களுடைய அரசாக இருக்கவேண்டும் என்றார்.
அரசாங்கத்தினுடைய நோக்கம் என்ன? என்பதுபற்றி இங்கே அய்யா பாலச்சந்திரன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.
அய்ந்து அம்சங்களை உருவாக்கவேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சொல்லவிட்டு,
JUSTICE, social, economic and political; LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
சமூகநீதிக்கு அப்பாற்பட்டு- வசதியை அனுபவிக்க வேண்டும் என்கிற கூட்டம் பொருளாதார ரீதியாக என்று போட்டுக் குழப்பியது.
9 ஆயிரம் ரூபாய் வருமான உச்சவரம்பு ஆணையை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியது!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருக் கும்பொழுது 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்ச வரம்பு ஆணையை கொண்டு வந்தார். அதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியது. அப்பொழுதும் நாம் விளக்கமாக எடுத்துச் சொன்னோம்.
உயர்ஜாதியினரில் ஏழை என்று சொல்லி குழப்பவேண்டாம். சமூகநீதி என்பது வேறு; பொரு ளாதார நீதி என்பது வேறு; அரசியல் நீதி என்பது வேறு.
2,500 ஆண்டுகளுக்கு முன்னால், தலைசிறந்த பகுத்தறிவாதி
எனவே, நீதியை மூன்று அம்சங்களாகப் பிரிக்கிறார்கள்.
சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற வார்த்தைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வைக்கும்பொழுது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஒரு விளக்கம் சொன்னார், ‘‘மேற்கண்ட மூன்று வார்த் தைகளும் பிரெஞ்சு புரட்சியில் பிரபலமான வார்த் தைகள். நான் அதைத்தான் எடுத்து வைத்திருக்கிறேன் என்று நிறைய பேர் நினைத்திருப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. மேற்கண்ட மூன்று வார்த்தைகளையும் எங்கே இருந்து நான் எடுத்துச் சேர்த்தேன் என்றால், 2,500 ஆண்டுகளுக்கு முன்னால், தலைசிறந்த பகுத்தறிவு வாதியாக இருந்த புத்தருடைய தத்துவங்கள்தான் இந்த மூன்று தத்துவங்கள். அதிலிருந்துதான் நான் எடுத்தேன்'' என்று சொன்னார்.
இப்பொழுது நாடு எங்கே போகிறது? என்று சொல்லும்பொழுது நண்பர்களே, நமக்கு நாமே கொண்டு வந்த அய்ந்து அம்சங்கள் எந்த அளவிற்கு வந் திருக்கின்றன?
இங்கே சொன்னார்கள், முன்பு இருந்தவர்கள் ஒவ் வொரு முறையும் போராடித்தான் சமூகநீதியைப் பெற்றிருக்கிறார்கள்.
தந்தை பெரியாரால், முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது சமூகநீதிக்காக.
சமூகநீதிக்கு நல்ல விளக்கமான வார்த்தை வகுப்புவாரி உரிமை!
1928 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் வகுப்புவாரி உரிமை - கம்யூனல் ஜி.ஓ.வுக்காகப் போராட்டம் நடைபெற்றுவந்திருக்கிறது.
சமூகநீதி என்ற வார்த்தை பின்னாளில்தான், பிரபல மாயிற்று. அதற்குமுன் வகுப்புவாரி உரிமை என்பதுதான். சமூகநீதிக்கு நல்ல விளக்கமான வார்த்தை வகுப்புவாரி உரிமை என்பதுதான்.
அதற்கான விளக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்பொழுது சொல்வார்.
‘‘கம்யூனல், கம்யூனல்'' என்று சொல்கிறீர்களே, அது ஏதோ தவறான சொல் போன்று இப்பொழுது ஆக்கிவிட்டார்கள்.
அதை விளக்கிச் சொன்னார் தந்தை பெரியார், ‘‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்; எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொன்னார். யார், யார் எங்கெங்கே இருக்கிறார்களோ, அவரவர்களுக்கான வாய்ப்புகளை உண்டாக்கவேண்டும். அதுதான் வகுப்புவாரி உரிமை'' என்பதாகும்.
இல்லை, இல்லை அது தவறானது என்று சொன்னார்கள்.
‘‘வகுப்புகள் இருக்கின்ற வரையில்,
வகுப்புவாரி உரிமை தேவை!’’
அப்பொழுது பெரியார் சொன்னார், ‘‘வகுப்புகள் இருக்கின்ற வரையில், வகுப்புவாரி உரிமை தேவை!'' என்றார்.
இதை மற்றவர்கள் புரிந்துகொள்கிறார்களோ இல் லையோ - இந்த அரசமைப்புச் சட்டத்தை விடக்கூடாது. அப்படி விட்டால், தங்களுக்கு ஆபத்து என்று சமத்துவ எதிர்ப்பாளர்கள் நினைத்தார்கள்.
ஆகவேதான், இரண்டு சித்தாந்த ரீதியாக இருப்பது - கொள்கை ரீதியாக இருப்பது - ஒன்று சுயமரியாதை இயக்கம் - சமதர்மத்திற்கு, சமத்துவத்திற்கு, சுதந்திரத் திற்கு, சகோதரத்துவத்திற்கு, நீதி வேண்டும் என்று சொல்வதற்கு உரியதாகும்.
ஆர்.எஸ்.எஸ். தலைமை என்பது ஒரே ஜாதிக்குள்தான்!
இரண்டாவது, ஆர்.எஸ்.எஸினுடைய தத்துவம் என்பது - அந்த அமைப்பில் வடபுலத்தில் தலைமை ஒரே ஜாதிக்குள். அதுவும் சித்பவன் பார்ப்பனர் களுக்குள்தான் இருக்கவேண்டும்.
ஜாதியை ஒழித்துவிடுவார்கள்; சமத்துவத்தை உண் டாக்குவார்கள் என்றவுடன், அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது.
ஏனென்றால், மேற்கண்டபடி வந்துவிட்டால், அவர் களுடைய ஆதிக்கம் போய்விடும். மக்கள் தொகையில் 3 சதவிகிதம்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள்தான் எல்லா அதிகாரத்திலும் இருக்கிறார்கள்.
ஒரு பக்கத்தில் அதிகார வர்க்கம் - அய்யா சொன் னதுபோன்று, ‘‘பிராமிணோகிரசி'' - முடிவு செய்கிற இடத்தில். இன்னொரு பக்கம், மற்ற போராட்டங்கள்.
முதலில் அவர்கள் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் தெளி வாக எழுதினார்கள். அதற்குப் பதிலாக மனுதர்மம்தான் அரசமைப்புச் சட்டமாக வரவேண்டும் என்றார்கள்.
மனுதர்மம் என்ன சொல்கிறது? முகத்தில், தோளில், தொடையில், காலில் பிறந்தவர்கள் என்று சொல்லுகிற ஜாதியை, வருணாசிரம தர்மத்தை, ஸநாதனத்தை நிலை நாட்டக்கூடிய ஒரு மனுநீதி என்ற நிலை. அப்பொழுது ஆரம்பித்த போராட்டம்தான் ஆரிய - திராவிட போராட்டம்.
அதற்கு முன்பே, அரசியல் ரீதியாக இதனைப் புரிந்து கொண்ட நீதிக்கட்சி - பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்ற ஒன்றை தொடங்கியது.
பெரியார்தான், திராவிடர் என்று மாற்றுவதற்குக் காரணத்தை மிக அழகாகச் சொன்னார். 97 பேர் சென்று, மூன்று பேர் அல்லாதவர் என்று கேட்கிறீர்கள்? என்று.
‘‘ஈரோட்டுக்காரர்கள் அல்லாதவர்கள் சங்கம்!'’
கடலூரில் அய்யா உரையாற்றும்பொழுது சொல்கிறார், ‘‘நான் ஈரோட்டுக்காரன்; எங்கள் ஊரைச் சேர்ந்த 10 பேர் கடலூருக்கு வந்து வியாபாரம் செய்கிறார்கள் என்றால், அவர்கள் ஒரு சங்கம் தொடங்கவேண்டும் என்று நினைக் கிறார்கள். அப்பொழுது அவர்கள் என்ன பெயர் வைப்பார்கள் - ‘‘ஈரோட்டுக்காரர்கள் அல்லாதவர் கள் சங்கம்'' என்றா கடலூர்காரர்கள் மத்தியில் பெயர் வைப்பார்கள்.
‘‘கடலூர்காரர்கள் சங்கம்'' என்று பெயர் வைப் பதைவிட்டுவிட்டு, ஈரோட்டுக்காரர்கள் 3 பேரோ, 10 பேரோ இருக்கிறார்கள் என்பதற்காக, ‘‘ஈரோட் டுக்காரர்கள் அல்லாதவர்கள் சங்கம்'' என்று வைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டார்.
ஆக, அப்படிப்பட்ட சூழ்நிலையில், அன்றைக்குத் தொடங்கியதிலிருந்து, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த திலிருந்து, அன்றைக்கு ஒரு பெரிய சமூகப் போராட் டத்தை நடத்தி, குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தோம். இன்றைக்கு அதையே ‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற திட்டத்தைக் கொண்டு வந்து - போகிற போக்கில் இதை செய்துவிட்டுப் போகலாம் என்று சொல்லுகின்ற அள விற்கு அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அந்தப் போராட்டம் ஆரிய - திராவிடப் போராட்டம் - விட்டுவிட்டு வரும். ஆட்கள் மாறும்; ஆனால், அந்தத் தத்துவப் போரினுடைய அடிப்படை அப்படியே இருக்கும்.
நபர்கள் முக்கியமல்ல; அவர்களின் சித்தாந்தங்களும், தத்துவங்களும் ஆபத்தானவை!
ஒரு காலகட்டத்தில் மனுவாக இருக்கும். இன் னொரு காலகட்டத்தில் அது இராஜகோபாலாச் சாரியாராக இருக்கும்; இன்னொரு காலகட்டத்தில், அது மோடியாக இருக்கும்; ஆர்.எஸ்.எஸாக இருக்கும்.
ஆகவே, நபர்கள் முக்கியமல்ல; அந்த சித்தாந் தங்களும், தத்துவங்களும் ஆபத்தானவை. எப்படி நோய் வெவ்வேறு பெயர்களில் வருகிறதோ, வெவ் வேறு காலகட்டங்களில் வருகிறதோ, அதேபோலத் தான், இந்தப் போராட்டங்களும்.
ஒரு பெரிய வெற்றி என்னவென்றால், அய்யா பாலச் சந்திரன் அவர்கள் மிக அழகாக முன்னுரை போன்று சொன்னார்கள். நேரமின்மையால், சுருக்கமாகச் சொல் கிறேன்.
அந்தக் காலகட்டத்தில் இருந்த எதிரிகளுக்கும், இப்பொழுது இருக்கும் கொள்கை எதிரிகளுக்கும் என்ன வேறுபாடு என்றால், முன்பு இருந்த எதிரிகள் - இராஜகோபாலாச்சாரியார் உள்பட சொல்கிறோம் - ஒருவகையில் வெளிப்படையான எதிரிகள். ஆனால், இப்பொழுது இருக்கும் எதிரிகள் அதுபோன்று இல்லை.
விஷ உருண்டையின்மேல் சர்க்கரையோ, தேனையோ தடவித் தருகிறார்கள்.
நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளி காப்பாற்றப்படுவார்!
மருந்தில் சில மில்லி கிராம் விஷம் கலந்து கொடுப் பதில் தவறில்லை. அளவிற்குமீறி அதில் விஷம் கொடுப்பதுதான் தவறு.
ஆண்டிபயாடிக் மருந்து வாங்கினால், அதில் விஷம் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று போட்டிருப்பார்கள். அதற்காக விஷத்தைக் கொடுக்கவில்லை. இத்தனை மில்லி கிராம் விஷம் சேர்க்கப்பட்டு இருக்கிறது என்று போட்டிருப்பார்கள். அப்பொழுதுதான் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளி காப்பாற்றப்படுவார்.
ஒன்றியத்தில் பா.ஜ.க.வினர் இரண்டு முறை ஆட் சிக்கு வந்துவிட்டார்கள். எப்படி வந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தந்திரங்கள்மூலமாகத்தான் என்று எல்லோருக்கும் தெரியும். சமூகநீதியைக் கொல்லக்கூடிய அதிகாரம்தான் தலைதூக்கி நின்றது.
50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறதா அரசமைப்புச் சட்டத்தில்?
50 சதவிகித இட ஒதுக்கீட்டைப்பற்றி இங்கே சொன்னார். அரசமைப்புச் சட்டத்தில் எந்த இடத் திலும் எத்தனை சதவிகிதம் இருக்கவேண்டும் என்று வரையறை சொல்லவேயில்லை. எப்படி இவர்களே உண்டாக்கினார்கள்? 50 சதவிகிதத் திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்று சொல்லப்பட்டு இருக்கிறதா அரசமைப்புச் சட்டத் தில்? கிடையவே கிடையாது.
பாலாஜி என்ற ஒரு வழக்கு கருநாடக மாநிலத்தில் நடைபெறுகிறது. அங்கே நீதிமன்றத்தில் அமர்ந்திருக் கின்ற உயர்ஜாதி நீதிபதி- அவரே ஒன்றை உருவாக்கி விடுகிறார்.
நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் நீதிபதி அவர்கள், மண்டல் கமிசன் வழக்கில் - இந்திரா சகானி வழக்கில் ஒரு குறிப்பை அழகாகச் சொன்னார்.
தீர்ப்பினுடைய மய்யக் கருத்தோ - தீர்ப்பினுடைய தத்துவ ரீதியான முடிவோ அல்ல. ளிதீவீtமீக்ஷீ பீவீநீtணீ என்று சொன்னார்.
அதாவது வழக்கிற்கு நேரிடையான சம்பந்தப்பட்டது கூட அல்ல - அதற்குமேல் போகக்கூடாது.
ஆனால், நமக்கென்று வந்தால், 27 சதவிகிதம்; மற்ற வர்களுக்கு என்றால், 50 சதவிகிதத்திற்குமேல் போகக் கூடாது என்றார்கள்.
50 சதவிகிதம் எங்கே சொல்லப்பட்டு இருக்கிறது?
அப்படி சொல்லப்படவில்லை என்று சொன்னால், தகுதி போகும், திறமை போகும் என்று சொன்னார்கள். ஒவ்வொரு இடத்திலும் தந்திரம், தந்திரம், தந்திரம்தான்.
திறந்த போட்டியில் எல்லோருக்கும் அங்கே கதவு திறந்திருக்கும்
அய்யா பாலச்சந்திரன் அவர்கள் சொன்னார்கள் பாருங்கள், 27 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கூட - தமிழ் நாட்டில், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கும் திறந்த போட்டி என்று சொன்னார். அந்தத் திறந்த போட்டியில், எல்லா ஜாதிக்காரர்களும் போட்டி போடுவார்கள். எல்லோருக்கும் அங்கே கதவு திறந்திருக்கும். அதில் யார் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, யார் திறமைசாலியோ அவர்களுக்கு அந்த இடம். அது யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அந்த இடங்களுக்கும் மற்றவர்கள் எல்லாம் படித்து வந்துவிடுகிறார்கள் என்பதினால், அவர்களுக்குக் கோபம்.
வடநாட்டிலும், ஒன்றிய அரசிலும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் - திறந்த போட்டியில் வருகின்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நம்முடைய சகோதரர்கள் வருகின்றார்கள்.
நாங்கள் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்க்கின்றோம்!
திறந்தவெளிப் போட்டி என்பது தனி - ஆனால், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில், ஹண்டே அவர்கள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபொழுது ஒரு விளம்பரம் வெளிவந்தது. நாங்கள் பெரியார் கண்ணாடி போட்டுப் பார்ப்பதினால், அந்தக் கிருமிகள் எல்லாம் டக்கென்று தெரிகிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment