ஹிந்துத்துவவாதிகளின் மதவாத வெறுப்பு திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

ஹிந்துத்துவவாதிகளின் மதவாத வெறுப்பு திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதாம்

பெங்களூரு, நவ. 12-  கருநாடகாவில் திப்பு சுல் தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறீரங்கப்பட்ணாவில் 10.11.2023 அன்று 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

‘மைசூரு புலி' என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆ-ம் தேதி, கருநாடகாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கொண்டாடி வருகின் றன. அவரதுஆட்சிக் காலத்தில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்ட தாக இந்துத்துவ அமைப் புகள் குற்றம்சாட்டுகின் றன.

இதனால் திப்பு சுல் தான் ஜெயந்தி கொண் டாட பாஜக, பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர்.

இதனால் நேற்றுமுன் தினம் திப்பு சுல்தான் ஜெயந்தி நிகழ்ச்சி பெங் களூரு, மைசூரு, குடகு, மங்களூரு ஆகிய இடங் களில் பலத்த காவலுடன் நடத்தப்பட்டது. திப்பு சுல்தானின் நினைவகம் அமைந்துள்ள சிறீரங்கப் பட்ணாவில் ஆயிரக் கணக்கான காவல் துறை யினர் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டனர்.

முஸ்லிம் மற்றும் இந் துத்துவ அமைப்பினர் ஊர்வலமாக செல்ல காவல் துறையினர் அனு மதி மறுத்தனர். இருப்பி னும் மண்டியா தேசிய நெடுஞ்சாலையில் 50-க் கும் மேற்பட்டோர் அத்துமீறி ஊர்வலமாக சென்றனர். அவர்கள் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாட்டத்துக்கு எதிராக முழக்கம் எழுப் பியதால் பதற்றம் ஏற்பட் டது. 

இதையடுத்து காவல் துறையினர் இந்துத்துவ அமைப்பினரை கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே சிறீரங் கப்பட்ணாவில் நேற்று இரவு 12 மணி வரை 144 தடை பிறப்பித்து மண் டியா மாவட்ட ஆட்சியர் குமார் உத்தரவிட்டார். பொது இடங்களில் கும் பலாக சேர்வது, ஊர்வல மாக செல்வது ஆகிய வற்றை தவிர்க்குமாறு கோரினார். 

இதனால் அங்கு பர பரப்பான சூழல் நிலவி யது.

No comments:

Post a Comment