மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை, நவ. 4- இந்திய வம்சா வளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆவதை  நினைவுகூரும் வகையிலும், இலங்கைக்கு ஆற்றிய சேவை களையும், இலங்கையின் பொரு ளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய அரசாங்கத் தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்ட மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நாம் 200' என்ற தலைப்பிலான தேசிய நிகழ் வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வழங்கிய வாழ்த்து ரையில் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் வாழும் மலை யகத் தமிழ் மக்களின் வாழ்வு என்பது 200 ஆண்டுகளை எட் டுகிறது. இரண்டு நூற்றாண்டு காலமாக தனிப்பெரும் இன மாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள்!

இந்த நிகழ்ச்சியில் நான் காணொலி மூலமாக உரை யாற்ற வேண்டும் என வேண்டு கோள் விடுத்த அருமை சகோ தரர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கி றேன்.  

மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர் கள் மலையகத் தமிழர்கள்! மலையகத் தமிழ்த் தொழிலா ளர்களின் வரலாறு - இலங்கை யில் காப்பி பயிர் செய்யப்பட்ட ஆரம்பகாலம் முதல் தொடங்கு கிறது.

1823-ஆம் ஆண்டு கம்ப ளைக்கு அருகே உள்ள சிங்க பிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்தியத் தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களை யும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார். இது இலங் கைப் பொருளாதாரத்தில் மகத் தான மாற்றத்தை உருவாக்கி யது.

காப்பித் தோட்டங்கள் பெருகப்பெருக இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல் லப்பட்டனர். காப்பி தோட் டத்தையடுத்து தேயிலைத் தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமி ழர்கள் வளப்படுத்தினார்கள். பின்னர் ரப்பர், தென்னை என அனைத்துப் பணப் பயிர்களது உற்பத்தியும் மலையகத் தமிழர் களது உழைப்பால் உருவானது தான்.

பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும் - காடுகளாக இருந்த நிலத்தை காசுப் பயிர்களாக விளைவித்தும் பின்தங்கிய பொருளாதாரத்தை முன்னணி பொருளாதாரமாக ஆக்கிய வர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்! இப்படி கடந்த 200 ஆண்டுகளாக இலங் கையின் நல்வாழ்வுக்கு மகத் தான பங்களிப்பை வழங்கியுள் ளனர். இன்னமும் வழங்கி வரு கின்றனர். 

அதாவது இலங்கை நாட் டுக்காக தங்களது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்க ளது ரத்தத்தையும் வியர்வையை யும் காலத்தையும் கடமையை யும் அந்த நாட்டுக்காகவே ஒப் படைத்தவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம்முதல் புலம்பெயர் தமிழர்களது உரி மையைக் காப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுள் ளது. 1952-ஆம் ஆண்டு தி.மு.க. வின் முதல் மாநில மாநாட்டில் பேசும்போது பேரறிஞர் அண்ணா அவர்கள், “இலங்கை வாழ் திராவிட மக்களுக்காக ஓட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலைநிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யா தீர். வீண் போக்கு வெற்றியைத் தராது” என்று பேசினார். 

தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில் தனி தீர் மானமே நிறைவேற்றப்பட்டது. 1957 தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் நிறைந்துள்ள வெளிநாடுகளில், தமிழர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக கோரியது. இப்படி தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஆரம்பகாலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.  

“கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமி ழர்களின் கண்ணீரால்!” என்று எழுதினார் அறிஞர் அண்ணா அவர்கள்.

மலையகத் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு திரும்பியபோது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடி யமர்த்தி TANTEA, அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் வாழ்வில் உயர வழிவகை செய் தோம். 

அந்த உணர்வோடுதான் அனைத்துப் பிரச்சினைகளை யும் அணுகி துயர் துடைக்கும் பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். அந்த வகையில், மலையக தமிழ் மக்களின் நீதியும் உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்பட வேண் டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் மேலெழும் பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரி மைகள், பொருளாதார உதவி கள், சமூக உரிமைகள் அனைத் தும் வழங்கப்பட வேண்டும்.

நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற் காக தொப்புள் கொடி உறவு களான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும். 

-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment