சாலைப் பராமரிப்பு தொடர்பான புகார்களுக்கு 'நம்ம சாலை செயலி' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 2, 2023

சாலைப் பராமரிப்பு தொடர்பான புகார்களுக்கு 'நம்ம சாலை செயலி' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நவ.2 தமிழ்நாட்டில் இன்றும் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளங்களற்ற சாலை மற்றும் பாது காப்பான சாலை என்ற நிலையை எட்ட தமிழ் நாடுஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் சாலை புகார்களை உடனடி யாக சரி செய்ய 'நம்ம சாலை செயலி' என்ற புதிய செயலி ஒன்றை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய பொதுமக்களின் பங்களிப்பினை பெறு வதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாலையில் உள்ள பள்ளங்களை அது தொடர்புடைய சாலையின் புகைப்படத்தை எடுத்து இந்த செயலியில் புகாராக பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த புகாரானது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மின் அஞ்சலாக அனுப்பப்படும். இந்த புகார் மூலம் சாலையை பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்வார்கள். இந்த சரி செய்யப்பட்ட சாலையின் விவரங்களை புகைப்படத்துடன் இந்த செயலியில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்வார்கள். இந்த விவரங்கள் புகார் அளித்த நபரின் அலைபேசிக்கு அனுப்பப்படும். இதில் மாநில நெடுஞ்சாலைகள் என்றால் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திலும் , மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment