உத்தரப்பிரதேசத்தில் ஆசிர மத்தில் ஒழுக்கக் கேடுகளால் பெரிதும் ஆசிரிமத்திலுள்ள பிரம்ம குமாரிகள் எனப்படும் பெண்கள் பெரிதும் பாதிப்புக் குள்ளானதும், அவர்களில் இருவர் தங்களை உயிரை மாய்த் துக்கொண்ட தகவலும் வெளி யாகியுள்ளது.
ஆசிரமத்தின் 4 ஊழியர்கள் ஒழுக்கமற்ற செயல்களில் ஈடு பட்டனர் என 3 பக்க தற்கொலை கடிதத்தில் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் பிரம்ம குமாரிகளுக்கானப் ஆசிரமம் ஒன்று உள்ளது. இதில் உறுப்பினர்களாக இருந்த 2 பெண்கள் திடீரென தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்த தும், மாவட்ட காவல்துறையினர் பெண்கள் இருவரின் உடல்களை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி காவல் உயரதிகாரி மகேஷ் குமார் கூறும்போது, அந்த இடத்தில் இருந்து, தற்கொலை குறிப்புகள் மற்றும் மொபைல் தொலைபேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டன. அந்த குறிப்பில் ஆசிரமத் தின் 4 ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன என கூறினார்.
ஏக்தா (வயது 38) மற்றும் ஷிக்கா (வயது 32) ஆகிய இந்த இரண்டு பெண்களும் ஆசிரமத் தில் ஓராண்டாக தங்கியிருந் தனர். அவர்கள் எழுதிய 3 பக்க தற்கொலை கடிதத்தில், ஒழுக்க மற்ற செயல்களில் ஆசிரமத்தின் 4 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அவர்களுடைய ரூ.25 லட்சம் பணமும் மோசடி செய்யப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முதலமைச்சர் ஆதித்யநாத் துக்கு அவர்கள் இருவரும் விடுத்த வேண்டுகோளில், ராஜஸ் தானில் ஆசிரமத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றச்சாட் டுக்கு ஆளாகி, தண்டனை விதிக் கப்பட்ட சாமியார் ஆசராமை போன்று, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர் களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment