கொல்கத்தா, நவ.25- தற்போது எதிர்க்கட்சி களை துன்புறுத்தும் ஒன்றிய விசாரணை அமைப்புகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதா மீது பாயும் என மம்தா கூறியுள்ளார்.
திரிணாமுல் காங். தலைவர்கள் கைது
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பல்வேறு வழக்குகளில் ஒன்றிய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதை கண்டித்துள்ள மாநில முதலமைச்ச ரும், திரிணாமுல் காங்கிரஸ் தலை வருமான மம்தா எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் சி.பி.அய்., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதை யும் சாடியுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த திரி ணாமுல் காங்கிரஸ் கூட் டத்தில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
3 மாதங்கள் கூட நீடிக்கும்
ஒன்றிய ஆளும் அரசுஇன் னும் 3 மாதங்கள் கூட நீடிக்கும். தற்போது எதிர்க்கட்சிகளை குறிவைக்கும் ஒன்றிய விசாரணை அமைப்புகள், 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜனதாவை குறி வைத்து பாயும். ஒன்றிய பா.ஜனதா அரசு இடஒதுக்கீட்டை ஒழிக்க விரும்புகிறது. ஆனால் நான் அதை உறுதியாக எதிர்ப்பேன்.
சிறுபான்மையினர் இட ஒதுக் கீட்டையும் பா.ஜனதா எதிர்க்கிறது. ஆனால் அதை ஓ.பி.சி ஒதுக்கீடுக்கு கீழ் கொண்டு வருவோம். மெட்ரோ ரயில் நிலை யங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
கிரிக்கெட்டில் வெற்றி பெற்றிருப்போம்
காவி என்பது தியாகிகளின் வண்ணம். ஆனால் நீங்கள் போகிகள். காவி உடைக்கு கிரிக் கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் பயிற்சியில் மட்டும் காவி அணிந்து விட்டு போட்டியில் அணிவதில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி ஆமதாபாத்துக்கு பதிலாக மும்பை அல்லது கொல்கத்தாவில் நடத் தப்பட்டிருந்தால் இந்தியா வெற்றிபெற்று இருக்கும். உலகக் கோப்பையில் பாவி கள் கலந்து கொண்ட ஒரு போட்டியைத் தவிர மற்ற எல்லாப் போட்டிகளிலும் இந்திய அணியினர் வெற்றி பெற் றனர். நாட்டின் பொருளாதாரத்தை ஒன்றிய அரசு சீரழித்துவிட்டது. வங்கித்துறை மந்தமான நிலையில் உள்ளது. பொதுத் துறை நிறுவ னங்கள் விற்கப்படுகின்றன. வேலையில்லா திண்டாட்ட விகிதம் மிகவும் உயர்ந்து உள்ளது.
இவ்வாறு மம்தா கூறினார்.
No comments:
Post a Comment