தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 20, 2023

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் மீண்டும் பருவ மழை தீவிரம்

சென்னை, நவ. 20 -  வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடை வதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம் மாவட் டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று (20.11.2023) கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ் நாட்டில் இன்னும் பரவலான மழைப்பொழிவு இல்லை. ஆங் காங்கே ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவகாலத்தில் மழையை பெறும் தென் மாவட் டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தான் தற்போதும் மழை பெய்து வருகிறது. 

கடந்த அக்.1 முதல் நவ.19ஆ-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 29.8 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 25 செ.மீ. மழைதான் பெய்து உள்ளது. இது வழக்கத்தைவிட 16 சதவீதம் குறைவு.

இதற்கிடையே, வங்கக்கட லில் உருவான மிதிலி புயலால், இந்த பருவத்துக்கு மாறாக, காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் தமிழ் நாட்டில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. வட மாவட் டங்களில் வானம் தெளிவாக உள்ளது. அவ்வப்போது வெயி லும் காணப்படுகிறது.

புயல் தற்போது கரையை கடந்துவிட்ட நிலையில், வட கிழக்கு பருவமழை காலத்துக்கே உரித்தான வகையில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வலுவடைந்து வரு கிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே போல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேல டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.20) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21, 22, 23, 24ஆ-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 25ஆ-ம் தேதி ஒருசில இடங் களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக் கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச் சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட் டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங் களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 22-ஆம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 23ஆ-ம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட் டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்க ளுக்கு வானம் மேகமூட்டத்து டன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

No comments:

Post a Comment