தந்தை பெரியாரைப் பொறுத்தவரை யார் ஆளுகிறார் என்பது முக்கியமல்ல. எப்படி ஆளுகிறார் - யாருக்கான ஆட்சி என்பதுதான். ‘‘நான் என்றைக்கும் கட்சிக்காரனாக இருந்ததில்லை; கொள்கைக்காரனாகவே இருந்திருக்கிறேன்'' என்றார் தந்தை பெரியார். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரை (ராஜாஜியை) பதவியிலிருந்து விரட்டி, அந்த முதலமைச்சர் நாற்காலியில் காமராசர் அமர்வதற்குக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.
ஆட்சிக்கு வந்தவுடன் ஆச்சாரியார் மூடிய 6 ஆயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு, பல்லாயிரக்கணக்கான புதிய பள்ளிகளையும் திறந்து, ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்துக்குக் ‘கல்தா' கொடுத்தவர் காமராசர்.
கல்விக் கண்களைத் திறந்தவர் காமராசர் என்றார். ‘பச்சைத் தமிழர்' என்றும் காமராசரைப் பாராட்டினார் தந்தை பெரியார்.
'கல்கி' போன்ற பார்ப்பன ஏடுகள் - ‘கதர்ச்சட்டைக்குள் கருப்புச்சட்டை' என்றும், ‘குயில் (காமராசர்) முட்டையிடுகிறது - காக்கை (பெரியார்) அடைகாக்கிறது' என்று கார்ட்டூன் போட்டவர்களா குதர்க்கம் பேசுவது!
‘பிராமணர்களே, பூணூலைப் பிடித்துக்கொண்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கள்!' என்று சொன்ன ஆச்சாரியார் ராஜாஜியின் மூக்கை உடைத்தவர் தந்தை பெரியாரின் சீடரான அறிஞர் அண்ணா!
வரலாறு புரியாமல்
வக்கணை பேசாதே, தினமலரே!
No comments:
Post a Comment