பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 393ஆவது வார நிகழ்வாக மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி 28-10-2023 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக அலுவலகத்தில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் தலைமையில், அம்பத்தூர் பகுதி கழக தலைவர் பூ.இராம லிங்கம், இளைஞரணி செயலாளர் ஏ.கண்ணன் ஆகி
யோர் முன்னிலையில், பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புரையுடன், தி.மு.க.தலைமை கழக பேச்சாளர் மா.வள்ளிமைந்தன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். நிகழ்வில் தி.மு.க. வட்டச் செயலாளர் த.வ.லால்,கு.சங்கர், அமரன், செந்தமிழ் பரிதி, பிச்சை மணி, பத்மநாபன், கருப்பசாமி, ஆறுமுகம், ராஜா, விஜயகுமாரி, சிவகுமார், அறிவுமதி, அன்புமணி, புஷ்பா, பன்னீர்செல்வம், சுமதி மணி, அருள்விழியன், இன்பநிலா, கஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் தமிழ் மதி நன்றி கூற கூட்டம் முடிவுற்றது.
No comments:
Post a Comment