வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானது தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்புண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 17, 2023

வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானது தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்புண்டு

சென்னை, நவ. 17  தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை ஒரு புறம், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றொரு புறம் என மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. 

தற்போது விசாகப் பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டிருந்த காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக  உரு வானது நாளை நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை வங்கதேசத் தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

 இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று மிதிலி புயலாக உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கட லில் நிலைக் கொண்டி ருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் பரிந்துரை யின் படி இந்த புயலுக்கு 'மிதிலி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த மே மாதம் மேக்கா புயலும், அக்டோபர் மாதம் ஹாமூன் புயலும் உரு வான நிலையில், நடப் பாண்டில் உருவாகும் மூன்றாவது புயலாக இது இருக்கும். தமிழ்நாட் டைப் பொறுத்தவரை, அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத் துள்ளது குறிப்பிடத்தக் கது. கடலூர், மயிலாடு துறை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப் பதாக கூறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment