தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 16, 2023

தமிழ்நாட்டில் படிப்படியாக மழை குறையும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ. 16- வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா நோக்கி நகர்வதா கவும், தமிழ்நாட்டில் மழை படிப் படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறி யதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் பகு திகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்ற ழுத்தத் தாழ்வு மண்டலமாக, விசா கப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ. 16) ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு, வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடலோரப் பகுதிக ளில் நிலவக்கூடும்.

இலங்கை கட லோர பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.      

20, 21ஆ-ம் தேதிகளில் சில இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். படிப்படியாக மழை குறையும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

சில பகுதிகளில் இடி, மின்னலு டன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த அக்.1 முதல் நவ.15 வரை சராசரியாக 24 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 27 செ.மீ. மழை பதிவாகும்.

No comments:

Post a Comment