நமக்கு ஏற்படும் ஒருசில நோய்கள் பாலினத்தை பொறுத்து தீவிரமாகவும், மிதமாகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒற்றைத்தலைவலி: தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர் களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சினை உண்டாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதிக சிந்தனை மற்றும் போதுமான இடைவெளியில் உணவு உண்ணாத காரணத்தாலும் இந்த தலைவலி உண்டாகும்.
உணவு ஒவ்வாமையால் கூட ஒற்றைத்தலைவலி ஏற்படலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மருந்து உட்கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம்.
மன அழுத்தத் தலைவலி: மனஅழுத்தம், சோர்வு காரணமாக தலைவலி ஏற்படுகிறது. 35 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கே இந்த மன அழுத்தத் தலைவலி அதிகம் வருகிறது. அதிக வேலை, மன உளைச்சல், சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஏற்படுகிறது.
தொடர்ந்து திரையை பார்ப்பது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சோர்வு, மது அருந்துவது, சைனஸ், சளித்தொல்லை போதுமான அளவு தண்ணீர் பருகாதது போன்ற காரணங்களாலும் டென்ஷன் தலைவலி ஏற்படுகிறது. டென்ஷன் தலை வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு போதுமான அளவு ஓய்வுதான் அருமருந்து. மன அழுத்தத் தலைவலி அடிக்கடி ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
No comments:
Post a Comment