பரிதாப நிகழ்வு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

பரிதாப நிகழ்வு!

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஒரு மாதத்தில் இது 3ஆவது முறை பலி எண்ணிக்கை 150ஆக உயர்வு

காத்மாண்டு, நவ.4-  நேபாள நாட்டில் நேற்று (3.11.2023) நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட் டப் பகுதிகளில் மீட்புப் பணிகள் துரி தமாக நடைபெற்று வருகின்றன. இடி பாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக் கலாம் என அஞ்சுவதாகவும் பலி எண் ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் மீட் புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

6.4 ரிக்டர்

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று (3.11.2023) நள்ளிரவில் நில நடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத் துக்கு மேல் நிலநடுக்கம் உணரப் பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானது. நிலநடுக்கம் ஜாஜர்கோட் பகுதியில் லாமிடண்டா எனுமிடத்தில் மய்யம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அளவீடு மய்யம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நேபாள நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல், நாட்டின் முப்படைகளும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். ஜாஜர்கோட்டு டன் தைலேக், சல்யான் மற்றும் ரோல்பா மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியத் தலைநகர் டில்லி உள்பட நொய்டா, பாட்னா ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டது. இமாலய மலையில் அமைந்துள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானதாகவே இருக்கின்றது. அந்த வகையில் நேபாளத்திலும் அவ் வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவ துண்டு. கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் கட்டடங்கள் தரைமட்டமாகின என் பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment