மராட்டியத்தில் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

மராட்டியத்தில் இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம்

மும்பை, நவ.1 மகாராட்டிராவில் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக் கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அண்மையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட் டீல் தனது சொந்த கிராமத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப் டம்பர் 14 வரை தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட் டார். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சென்ற காவல்துறையினர், போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத் திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அரசு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் போராட்டத்தை கைவிட்டார். எனினும் கடந்த 24-ஆம் தேதிக்குள் மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவேன் என எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் சொந்த கிராமத்தில் மராத்தா சமூகத்தின ருக்கு இடஒதுக்கீடு கேட்டு கடந்த 24-ஆம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்முறை வெடித் தது. பல இடங்களில் மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடு பட்டு, சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தினர். 

இந்த நிலையில், மராட்டிய மாநிலத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பின ரான பிரகாஷ் சோலங்கி வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத் தனர். தகவல் அறிந்து காவல்துறையினர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் மாஜல்காவ் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற உறுப்பினர். வீடு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, மராத்தா இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு 40 நாள் கெடு விதிப்பது குழந்தைத்தனமான விளையாட்டு. கிராம பஞ்சாயத் துக்கு தேர்தலில் கூட போட்டி யிடாத ஒருவர் இன்று ஸ்மார்ட்டான மனிதராகிவிட்டார் என சட்ட மன்ற உறுப்பினர் பிரகாஷ் சோலங்கி பேசுவதாக ஒலிப்பதிவு வெளியானது. இந்த ஒலிப்பதிவு வெளியாகிய நிலையில்,சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்கும் மராத்தா போராட்டக்காரர்கள் தீ வைத் துள்ளனர்.


No comments:

Post a Comment