சமையல் எரிவாயு வேண்டுமென்றால் ஹிந்தி கற்றுக் கொண்டு வா என்று மக்களை துரத் துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா?
அதில் இந்திய மாநி லங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா?
இல்லை தெரிந்தே மீறுகிறார்களா? விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா?
மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவ ருக்கு மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment