தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து தோற்றுவரும் ஆளுநர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 21, 2023

தமிழ்நாடு அரசிடம் தொடர்ந்து தோற்றுவரும் ஆளுநர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி பேட்டி

சென்னை, நவ. 21- ஆளுநர் எல்லா  விடயங்களிலும் தமிழ்நாடு சட்டமன்றத்திடம் தோற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், உச்ச நீதிமன்றமே ஆளுநரை கொட்டு கொட்டி இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவ னில் தமிழ்நாடு காங்கிரஸ் தலை வர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஆளுநர் ஒரு பிரச்சினையாக மாறி இருக்கிறார். ஒரு ஆளுநர் பிரச்சினைக்குரியவராக மாறி இருப்பது இதுவரை தமிழ்நாடு வரலாற்றில் இல்லை. 

உச்சநீதிமன்றமே, "நாங்கள் கேள்வி கேட்ட பிறகு நீங்கள் ஏன் கோப்புகளை திருப்பி அனுப்பினீர் கள்" என்று ஒரு கொட்டு கொட்டி இருக்கிறது. ஆளுநர் ஏன் கையெ ழுத்து இடவில்லை என்பதை விளக்குவதற்கு இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று ஒன் றிய உளவுத்துறை அமைச்சகம் மண்டியிட்டு சொல்லி இருக்கிறது.

அப்படி என்றால், கோப்புகளில் ஏன் கையெழுத்திடவில்லை என்று ஆளுநர் முடிவு செய்யவில்லையா? எந்த முன்யோசனையும் இல்லா மல்தான் கையெழுத்து இடாமல் இருந்தாரா? எனவே, தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

எல்லா விடயங்களிலும் ஆளுநர் அதனிடம் தோற்றுக்கொண்டிரு கிறார். எவ்வளவு தோல்வி அடைந் தாலும், அதைப்பற்றி கவலைப் படாமல் மீண்டும் மீண்டும் கிறுக் குத்தனம் செய்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிப்பது குறித்த விடயத்தில் ஆளுநர் மிகவும் கீழ் நிலையை அடைந்துள்ளார். 

இதற்காக அவர் வெட்கி தலை குனிய வேண்டும். அ.தி.மு.க. _ - பா.ஜனதா பிளவு என்பது கற்பனை யானது, பொய்யானது. 

ஏற்கெனவே அவர்கள் முடிவு செய்து நடத்தும் ஒரு நாடகம் அது. அவர்களுக்குள் எந்த அள விற்கு கருத்து வேறுபாடு என்பதை யாவது அ.தி.மு.க. சொல்ல வேண் டும்.

என்ன காரணத்துக்காக கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம் என்பதற்கான கார ணத்தை அ.தி.மு.க. தெரிவிக்க வேண்டும். இதில் இருந்தே இது ஒரு தவறாக கதை வசனம் எழுதப்பட்ட நாடகம் என்பது தெரிகிறது.

பா.ஜனதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல் முறைகேடுகள், விவசாயிகளின் விரோத போக்கு, அதானி, அம் பானி உள்ளிட்ட சில தொழில் அதிபர்களின் சொத்துக்குவிப்புக்கு துணை போவது உள்ளிட்டவற்றை ஆதாரத்துடன் பட்டியலிட்டு பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் சிறு பிரசுரமாக வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment