5 நாட்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணியாமல் பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி வரு கின்றனர்.
இமாச்சலப்பிரதேசம் மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாம்.. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தி யிருக்கும் திருமணமான பெண்களை அழைத்துச் சென்று விடுமாம். இப்படி நடந்து கொண்டிருக்க இந்த கிராமத்து பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றிய தாம்.
லாஹு கோண்ட் தெய்வம் பேய்களை அழித்த நிகழ்வை நினைவு கூரும் விதமாக சாவான் மாதத்தில் 5 நாட்கள் இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணிவதில்லையாம். இந்த பாரம்பரியம் பல நூற்றாண்டு களாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காலப் போக்கில் வாலிப பெண்கள் ஒற்றை ஆடை உடுத்திக் கொள்ள மட்டும் அனுமதி அளித்துள்ளனர். இந்த சமயத்தில் கம்பளியால் செய்யப்பட்ட பட்காவைப் பயன்படுத்து கின்றனர்.
ஆனால் வயது முதிர்ந்தவர்கள் ஆடையின்றியே இருக் கின்றனர். இந்த விதியை மீறி ஆடை அணியும் பெண்கள் சிறிது நாட்களிலேயே கெட்டநிகழ்வுகளை சந்திப்பதால் யாரும் இந்த பாரம்பரியத்தை மீற முயல்வதில்லையாம். இன்றைய காலத்தில் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடையின்றி வெளியே வருவதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஆண்டின் இந்த 5 நாட்களில் ஆண்கள் யாரும் மது மற்றும் மாமிசம் உண்ணக் கூடாது. சம்பிரதாயத்தை முறையாக கடைப்பிடிக்காவிட்டால், தெய்வங்கள் கோபமடைந்து தீங்கு விளைவிக்கும் என்பது அய்தீகமாம்.
No comments:
Post a Comment