நெஞ்சு சளி, அதிக இருமல் - மீள்வதற்கான வழிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 13, 2023

நெஞ்சு சளி, அதிக இருமல் - மீள்வதற்கான வழிகள்

சளி, இருமல் பிரச்சினை உண்டாக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அதனோடு தொண்டை வலியும் சேர்ந்தால் இன்னும் அதிக உபாதை தான். சில வேளைகளில் காய்ச்சலும் உடன் சேரும். சளி இருமல் பிரச்சினை வரும் போது எப்படி அதிலிருந்து மீள்வது என்பதை தான் இப்போது பார்க்க போகிறோம்.

​சளி இருமலுக்கு இஞ்சி, துளசி, தேன் கஷாயம் ஒரு நல்ல தீர்வு.

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி, துளசி இலைகளை மசித்து அதி லிருந்து சாறு தனியாக எடுத்து. இஞ்சித் துண்டுகளை அரைத்து சாறு எடுத்து, சாறை மெல்லிய துணியால் வடிகட்டி, இஞ்சி சாறு, துளசி சாறு இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து விடவும். இதில் தேன் கலந்து கொள்ளவும். இதை அப்படியே கொடுக்கலாம்.

​யாருக்கு எவ்வளவு?

இதை ஒரு வயதுக்கு பிந்தைய குழந்தைக்கு கொடுக்க தொடங்கலாம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையாக இருந்தால் துளசி சாறு மட்டும் கொடுக்கலாம். மூன்று வயது வரையான குழந்தைக்கு அரை டீஸ்பூன் வீதம் மூன்று வேளை கொடுக்கலாம். மூன்று முதல் அய்ந்து வயது வரை உள்ள குழந்தைக்கு ஒரு டீஸ்பூன் கொடுக்கலாம். அய்ந்து வயது முதல் எட்டு வயது வரை உள்ள குழந்தை களுக்கு இரண்டு டீஸ்பூன் வரை கொடுக் கலாம். 8 வயது முதல் 12 வயதுக்கு மேற் பட்ட குழந்தைகளுக்கு 3 டீஸ்பூன் வரை கொடுக்கலாம்.

பதின்ம வயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை கால் டம்ளரில் பாதி அளவு வரை குடிக்கலாம். தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை வரை குடிக்கலாம்.

இரைப்பை குடல் பிரச்சினை கொண் டிருப்பவர்கள் இஞ்சியை குறைவாக எடுக்க வேண்டும். இதன் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​இஞ்சியின் நன்மைகள்

இஞ்சி இருமலை குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தேநீரில் சிறிய அளவு இஞ்சி சாறு சேர்ப்பது சுவையோடு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். தொடர் இருமல் வருவதால் நுரையீரலில் சிராய்ப்பை உண்டாக்க செய்யும். இஞ்சி நுரையீரல் தொற்றை வெளியேற்றும். இஞ்சியில் இருக்கும் ஜிங்கெரால் தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும். இஞ்சி சாறு பல்வேறு வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க லாம். இஞ்சி சுவாச நோய்த் தொற்றுகளுக்கு காரணமான வைரஸ்க்கு எதிராக செயல் படும்.

​துளசி இலைகள்

துளசி இலைகள் காய்ச்சலை தணிக்க கூடியவை. துளசி இலைகளின் சாற்றை ஒவ்வொரு 2 அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கொடுத்து வந்தால் போதுமானது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் போது துளசி இலை நீர் போதுமானது.

துளசி இலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளது. துளசி ஆண்டிபயாடிக் பண்பு களை கொண்டுள்ளது இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இது சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய் களுக்கு உடலுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. இருமல் இருக்கும் போது துளசி இலைகள் நான்கு மென்று சாப்பிட்டால் போதுமானது. ‘

​தேன்

இருமலை கட்டுப்படுத்துவதில் தேன் சிறப்பாக செயல்படுகிறது. குழந்தைகளுக்கு இருமலை அடக்க உதவும் பொருள்களில் தேனும் ஒன்று. இருமல் மருந்துகள் பக்க விளைவுகளை உண்டாக்கலாம். ஆனால் தேன் சிறந்த தேர்வாக இருக்கும். இது பக்க விளைவுகள் இல்லாதது.

ஆய்வு ஒன்றில் இருமல் மருந்துகளை விட தேன் சிறப்பாக செயல்படுவதாக காட்டுகிறது. இருமல் அறிகுறிகளை குறைத்து தூக்கத்தை மேம்படுத்துவதாக மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தேன் கொடுக்கக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment