பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 29, 2023

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு


திருப்பத்தூர், நவ. 29- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில்  சோலையார்பேட்டை ஆர். எஸ். மகாலில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் பெ. கலைவாணன் வரவேற் றார். தலைமை கழக அமைப் பாளர் கோ.திராவிட மணி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக கழக மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு குணசேகரன், கழகப் பேச்சாளர் பெரியார் செல்வன்,  மாநில பகுத்தறிவா ளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவ ணன் பங்கேற்று, ஆசிரியர் அவர்கள் பிறந்த நாள் பரிசாக விரும்புவது ‘விடுதலை' பத் திரிகை சந்தாக்களை தான். நாம் அதிக எண்ணிக்கையில் சந்தாக்களை சேர்த்து அவரி டம் கொடுப்பதே ஆசிரியர் அவர்களுக்கான பிறந்த நாள் பரிசாகும் என்று  சிறப்புரை யாற்றினார்கள்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், ‘விடுதலை' சந்தாக் களை தங்களின் பங்களிப்பாக எம்.என்.அன்பழகன்-1, நரசிம் மன்-1, சுப்புலட்சுமி-1, காளி தாஸ்-2, ரவி (ஆம்பூர்)-2, நாக ராசன்-2, கனகராஜ்-1,  ஜெ.எம்.வள்ளுவன்-1, கற்பகவல்லி - 5 சந்தாக்கள் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில், மாநில இளைஞரணி துணைச்செயலா ளர் சி.ஏ.சிற்றரசன், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன்,  மாவட்ட   துணைத் தலைவர் தங்க. அசோகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட  தலைவர் சி. தமிழ்ச்செல்வன், நகர தலைவர் காளிதாஸ், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் ரா. நாகராசன், சோலையார் பேட்டை நகர தலைவர் கே. ராஜேந்திரன், சோலையார் பேட்டை ஒன்றிய தலைவர் தா. பாண்டியன், மாவட்ட மகளி ரணி தலைவர் த. சாந்தி, மகளிர் பாசறை மாவட்ட தலைவர் ர.கற்பகவள்ளி, ப.ஆசிரியரணி மாவட்ட தலைவர் கோ.திருப் பதி, சோலையார்பேட்டை நகர தலைவர் சிவக்குமார், சோலையார்பேட்டை நகர அமைப்பாளர் ஜெ.எம்.பி. வள்ளுவன், விடுதலை வாசகர் வட்ட மாவட்ட அமைப்பாளர்  எம். என். அன்பழகன்,  மாவட்ட ப. க.  எழுத்தாளர் மன்றம் நா. சுப்புலட்சுமி, மாவட்ட தலைவர் இளைஞ ரணி எஸ். சுரேஷ் குமார், நகர அமைப்பாளர் க. முருகன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் அ. உலகன், மத்தூர் கழக பொறுப்பாளர் முருகே சன், ஆம்பூர் நகர பொறுப் பாளர் மா. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

இக் கலந்துரையாடல் கூட் டத்தில், திருப்பத்தூர் மாவட்ட  திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் இரா. நரசிம்மன் அவர்களின் வாழ்விணையரும், வேலூர் மாநகர  கழக தலைவர் ந. சந்திர சேகரன்  மற்றும் இராவணன், மணியம்மை சரவணன் ஆகி யோரின் தாயாருமான "சுயமரி யாதை சுடரொளி" ஜகதாம் மாள்  3.11.2023  வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் இயற்கை எய்திய நிலையில். அவரது இறுதி நிகழ்வு எவ்வித சடங்குகள் இல்லாமல் நடை பெற்றது. அம்மையாருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவிப்பது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயன் படுத்தும் 9ஆவது வாகனத்தை தனது முழுமையான மேற்பார் வையில் சிறப்பான முறையில் வடிவமைத்து அதை ஆசிரியர் அவர்களிடம் 20.10.2023 திருச் சியில் நடைபெற்ற பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில்  அமைச்சர் கே. என். நேரு முன் னிலையில் வழங்கி , அவ்விழா வில் அமைச்சரால்  அவர்களால்  பாராட்டு பெற்ற மாநில இளை ஞரணி துணை செயலாளர் சி.ஏ.சிற்றரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதெனவும், 

டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது  பிறந்த நாளை  சிறப்பாக கொண்டாடுவது எனவும்,  ஆசிரியர்   அவர் களுக்கு பிறந்த நாள்  பரிசாக அதிக விடுதலை சந்தாக்களை வழங்குவது எனவும், "தந்தை பெரியாரியல் பயிற்சி  கருத்தரங்கம்" மிகச் சிறப்பாக நடத்துவது எனவும், திருப்பத்தூர் மாவட் டத்திற்கு என்று திராவிடர் கழக அலுவலகம் திறந்து அதில் இயக்கப் பணிகள் மற் றும் தமிழ்நாடு பெரியார் கட்டு மானம் அமைப்பு சாரா தொழி லாளர்கள் உறுப்பினர்களைத் சேர்ப்பது எனவும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக காளிதாஸ் நகர தலைவர் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment