சென்னை, நவ. 12- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; "தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சனிக் கிழமைகளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப் படுகின்றன.
ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாடு சுகாதாரத்துறை நடவடிக்கையை தொடங்கிவிட்டது. புதுக் கோட்டை பல் மருத்துவக்கல்லூரியை வருகிற 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்."
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment