சாமியார் முதலமைச்சர் ஆட்சியின் அவலம் கடனை அடைக்க மகன்களை விற்ற அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 1, 2023

சாமியார் முதலமைச்சர் ஆட்சியின் அவலம் கடனை அடைக்க மகன்களை விற்ற அவலம்

லக்னோ, நவ.1 சாமியார் ஆதித்ய நாத் முதலமைச்சராக இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழில் இன்மை விவசாயம் பொய்த்து போனது, மதவாதம் காரணமாக தொழிற்சாலைகள் இன்மையால் வேலையில்லா திண் டாட்டம் தலைவிரித்தாடுகிறது, இதனால் கடனை அடைப்பதற்காக தனது மகனை விற்கும் நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள் ளனர் 

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் தந்தை ஒருவர் தனது மகனை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலிகரில் உள்ள ராட்வேஸ் பேருந்து நிலையத்தில் தந்தை ஒருவர் கழுத்தில் பலகையுடன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார். அந்த பலகையில், "என் மகன் விற்பனைக்கு இருக்கிறான், அவனை விற்க விரும்புகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. தனக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கடன் உள்ளதாகவும், தனது கடனை திருப்பிச் செலுத்த விரும்பியதால் தனது குழந்தையை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தந்தை தெரிவித்துள்ளார். 

தொழில் வளர்சிக்காக தனி யாரிடம் ரூ.50,000 கடன் வாங்கி இருந்தேன், ஆனால் எந்த ஒரு வருவாயும் இல்லை, அரசிடமும் தொழிலுக்குத் தேவையான பொருட்களை மானிய விலைக்கு தர கோரிக்கை விடுத் தேன், ஆனால் யாருமே எனது முறையீட்டை கேட்கவில்லை.

இந்த நிலையில் கடன் வாங்கிய தனியார் நிறுவனம் நெருக்கடி கொடுத்துவருகிறது. எனக்கு வேறு வழியில்லாமல் எனது மகனை விற்க முடிவு செய்தேன் என்று கூறினார்.

 சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மக்களை கொடுமைப்படுத்தி வாழ் வாதாரத்தை சிதைத்துவிட்டது, இதனால்  தந்தை தனது மகனை விற்க வைத்துள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். தன் மகனை விற்றுவிடுவதாக ஒரு தந்தை கழுத்தில் பதாகையுடன் கதறி அழும் நிலைக்கு தள்ளப் பட்டால், இது பாஜகவின் அழிவு காலம். இந்த படம் உலகம் முழு வதும் பரவி, மாநிலம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் களங் கம் ஏற்படுத்துகிறது என விமர் சித்துள்ளார்.


No comments:

Post a Comment