சீரம் நிறுவனத்திடம் பி.ஜே.பி. பெற்ற நன்கொடை எவ்வளவு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 26, 2023

சீரம் நிறுவனத்திடம் பி.ஜே.பி. பெற்ற நன்கொடை எவ்வளவு?

சூரத், நவ.26 குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர் வலர் தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவலை பெற்றுள்ளார். 

அதன்படி 2018-_2023 வரையிலான காலத்தில் 26 ஆயிரத்து 24 தேர்தல் பத்தி ரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  5 ஆண்டு காலத்தில் சீரம் நிறுவனத்திடம் இருந்து பாஜக ரூ.14,940, கோடி நன்கொடை வாங்கியுள்ளது.  2018 ஆம் ஆண்டு ரூ.1056 கோடியும், 2021 ஆம் ஆண்டு ரூ.1,502 கோடி யும், 2019 ஆம் ஆண்டும்ரூ.5,072 கோடியும், 2022 ஆம் ஆண்டு ரூ.3,705 கோடியும், 2020 ஆம் ஆண்டு ரூ.364 கோடியும், 2023 ஆம் ஆண்டு ரூ.3,240 கோடி வாங்கியுள்ளது. 

2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் 5,290 பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. 10 லட்சம் மதிப்பிலான பத்திரங்களும், ஒரு லட்சம் மதிப்பிலான பத்திரங்கள் 3,390 பத்திரங்கள் விற்பனையாகியுள்ளதாக ஆர்.டி.அய்.-ல் தெரியவந்துள்ளது.

கரோனா தொற்றுக்கான தடுப்பூசி கண்டறிவதில் உலகம் முழுவதும் முன்னணி மருந்து நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. 

இந்தியாவிலும் பாரத் பயோடெக், சீரம், ஜைடஸ் ஆகிய நிறு வனங்கள் கரோனா தொற்றுத் தடுப்புக்கான மருந்துகளைக் கண்டுபிடித்தன.

இந்த நிறுவனத்தின் மருந்துகளை வாங்க உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மோடி அழுத்தம் கொடுத் தார் என்றும் கூறப்பட்ட நிலையில் சீரம் நிறுவனம் பாஜகவிற்கு ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளது. இதன் மூலம் அதானிக்கு மட்டுமல்ல, பல நிறுவனங்களுக்கு மோடி பிரமோசன் மேனேஜராக வேலைபார்த்து வருகிறாரோ என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

No comments:

Post a Comment