ஜெய்ப்பூர், நவ 25- ராஜஸ்தா னில் சட்டமன்ற தேர்த லுக்கான வாக்குப் பதிவு. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ராஜஸ் தான் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரச் சாரத்தில் ஈடுபடும்போது, இந்த அரசை தொடர செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி வலி யுறுத்தினார்.
அவருடைய பதவிக் காலங்களில் செய்த சாத னைகள், பத்து உத்தரவா தங்களை நிறைவேற்றியது ஆகியவற்றை சுட்டிக் காட்டியதுடன், திரும்ப வும் ஆட்சிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டால், கூடு தலாக 7 வாக்குறுதிக ளையும் அமல்படுத்து வேன் என்று கூறினார்.
இந்நிலையில், ஜெய்ப் பூரில் நடந்த பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசி னார். அப்போது அவர், பிரதமரும் அவருடைய மொத்தக் குழுவினரும் ராஜஸ்தானில் முகா மிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் வரை மட்டுமே தங்கியிருப் பார்கள். அதன்பின்னர், அந்த கட்சி முகம் காட் டாது என்று கூறினார். அவர் தொடர்ந்து கூறும் போது, மராட்டியம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், அரசை கவிழ்த்து விட்டு பா.ஜ.க. ஆட்சியமைத்தது.
ஆனால் அது போன்று ராஜஸ்தானில் அவர்களால் செய்ய முடியவில்லை. அதனால், அவர்கள் எரிச்சலில் உள் ளனர் என பேசி யுள்ளார். அரசை கவிழ்க்க அம லாக்க துறை மற்றும் சி.பி.அய். அமைப்புகள் ஆகியவற்றை பா.ஜ.க. தவ றாக பயன்படுத்துகிறது என்றும் கெலாட் சாடி யுள்ளார்.
No comments:
Post a Comment