சென்னை, நவ.26 மோடி தலை மையிலான பாஜக ஆட்சி அதிகாரத் திற்கு வந்ததிலிருந்து அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்க்கும் முக்கியமான நபர்களில் திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜூம் ஒருவர். இந்தி மொழி திணிப்பு, ராகுல் காந்தி இடைநீக்கம், புதிய நாடாளுமன்ற கட்டடக் கொள்ளை என பாஜக அரசின் அடாவடி செயல்களை தைரியமாக தனது கருத்து மூலம் விளாசி வருகிறார் பிரகாஷ்ராஜ்.
சமீபத்தில் “டிவி 9” என்ற தெலுங்கு சேனலின் கருத்தரங்கத்தில் பிரதமர் மோடியை பெரிய நடிகர் என்று கூறினார். இந்த கருத்தால் கொதித்த ஒன்றிய மோடி அரசு வழக்கம் போல அமலாக்கத்துறை மூலம் அழைப்பாணை அனுப்பியது. முறைகேடு வழக்கில் சிக்கிய பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரத்தில் நடித்த காரணத்திற்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை விளக்கம் கூறியது.
இந்நிலையில் மிரட்டுவதெல்லாம் பழங்கால திரைக் கதை என அமலாக்கத்துறை அழைப்பாணைக்கு திரைக் கலைஞர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”அன்புள்ள ‘பவுனட்டி (தரித்திரம்) ‘. மிரட்டல் எல்லாம் பழங்கால திரைக்கதை (ஸ்கிரிப்ட்). வேறு ஏதேனும் முயற்சி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார். இதில் 'பவுனட்டி' என்பது மோடியை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment