உடுமலைப்பேட்டைக்கு அருகில் ஒரு சின்ன கிராமமாக இருந்த பெதப்பம்பட்டி இன்று முக்கியமான பேரூராட்சியாக மாறி நிற்கிறது. திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஆசிரியரை வரவேற்பதில் அளவற்ற மகிழ்ச்சி. ஆசிரியர் அவர்களுக்கு தொண்டர்களைக் கண்டவுடன் ஏற்பட்ட உற்சாகம் - இளைஞர்களுக்குள் சந்திப்பு நிகழும் காட்சி போல இருந்தது.
குடிமங்கலம் தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரி அவர்கள் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார். மூத்த தலைவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பை செய்ய வேண்டும் என்பதை மேடையிலே நடந்த அடுக்கடுக்கான காட்சிகள் அர்த்தமாக்கின. ஆசிரியர் அவர்களின் சுறுசுறுப்பிற்கும், உழைப்பிற்கும் எது உற்சாக மருந்து என்பது தெளிவாகத் தெரிந்தது.
- பெரியார் குயில், தாராபுரம்
No comments:
Post a Comment