ஜெயங்கொண்டம், நவ. 18- நேற்று (17.11.2023) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் வைக்கம் போராட்ட நூறாவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடை பெற்றது.
சிறப்பு விருந்தினராக பெரியார் பள்ளிகளின் ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் அவர்களும், பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன் (இயக்குநர், பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யம் பெரியார் நிகர்நிலைப் பல்கலைக்கழ கம்), சிகாமராஜ் அவர்களும், பெரியார் பள்ளியின் முதல் வர் அவர்களும் கலந்து கொண்டனர்.
வைக்கம் போராட்ட நிகழ் வினை மாணவர்கள் நாடக மாக நடித்துக் காண்பித்தனர்.
வைக்கம் போராட்டத் தினைப் பற்றி அய்ந்தாம் வகுப்பு மாணவி பிரதீபா, பத்தாம் வகுப்பு மாணவி விஷ்வ தர்ஷினி மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவி சிறீமதி ஆகியோர் உரையாற்றினர். மேலும் பெரியாரின் எழுச்சிமிக்க கருத்துகளை மாண வர்கள் நடனமாக நடித்துக் காண்பித்தனர். சிறப்பு விருந் தினர் முனைவர் நம்.சீனி வாசன் அவர்கள் வைக்கம் போராட்டம் பற்றிய அரிய பல கருத்துகளை மாணவர் களிடம் எடுத்துரைத்து வினாக்களை எழுப்பினார்.
மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துட னும் பதிலளித்தனர். தன் உரையின் மூலம் வைக்கம் போராட்டத்தை மாணவர் களின் கண் முன் கொண்டு வந்தார்.
No comments:
Post a Comment