பெரம்பலூர், நவ.19 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று (18.11.2023) வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கலந்து கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலம். எனவே எப்போதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் ஒருவரின் பெயர் 2 இடங்களில் இருத்தல், இறந்தவர்களின் பெயர்கள் ஆகியவற்றை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரே வாக்காளரின் பெயர் 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால் வாக்காளரின் ஒப்புதல் பெற்று அவர் எங்கு வாக்களிக்க விரும்புகிறார் என்பதை எழுத்துப்பூர்வமாக பெற்ற பிறகு மற்றொரு இடத்தில் பெயர் நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment