உலகளவில் வேலைவாய்ப்பின்மையில் இந்தியா முதலிடம்: தொழிலாளர் பேரமைப்பு தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 11, 2023

உலகளவில் வேலைவாய்ப்பின்மையில் இந்தியா முதலிடம்: தொழிலாளர் பேரமைப்பு தலைவர் பேட்டி

சென்னை, நவ. 11- சென்னை சேப் பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் மற் றும் தொழிலாளர்கள் பேரமைப்பு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

அப்போது, பேரமைப்பின் தலைவர் பிரபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பன்னாட்டு தொழி லாளர்கள் அமைப்பின் சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி 15வயது முதல் 34 வயது வரை உள்ள இளை ஞர்களின் வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் 23.22 சதவீதம் உள் ளது. 35 வயதுக்கு மேல் வேலை வாய்ப்பின்மை கேள்விக்குறியாக உள்ளது. உலக நாடுகளின் வேலை வாய்ப்பின்மை குறித்த விவரத்தில் இந்தியா முதலிடம் உள்ளது. இதே நிலை நீடித்தால் இளைஞர் களின் எதிர்காலம் என்ன ஆகும்.

வேலைவாய்ப்பின்மையால் சட்டம் -ஒழுங்கு சீர்கேடு, போதை பொருட்களுக்கு அடிமை ஆவதற்கும் குழந்தைகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும் நாம் வழிவகுக்கிறோம். இன்று நாம் செயல்படாவிட்டால் நமது பிள் ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும். கடந்த 2020ஆம் ஆண்டு வேலையின்மையின் கார ணமாக நாடு முழுவதும் 3,548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. வேலைக்கான மனிதர்கள் தேவை அதிகமாக உள் ளது. ஆனால் நம் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. படித்த இளைஞர்கள் வேலை இல்லாததற்கு இதுவே காரணம்.

இந்தியாவில் 100 சதவீதம் வேலைவாய்ப்புகள் அனைவருக் கும் கிடைக்க ஒன்றிய, மாநில அர சுகள் அனைத்து கல்லூரி நிறுவனர் கள், அனைத்து கட்சிகள், மத, இன, மொழி தலைவர்கள், அனைத்து சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந் தியாவின் வேலைவாய்ப்பின்மைக்கு விரைவில் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண் டும். நமது சந்ததியின் வளர்ச்சி நமது குடும்பத்தின் வளர்ச்சி, நமது குடும்பத்தின் வளர்ச்சி நமது தேசத் தின் வளர்ச்சி, தேசத்தின் இளை ஞர் கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் விரைவில் இந்திய தேசத்தின் இந்த நிலைமை மாறும். மிகப் பெரிய பொருளாதார ஜிடிபி 30% முதல் 70% வரை உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment